ஆடி அமாவாசையில் சிரத்தையுடன் செய்வோம் சிரார்த்த கடமை

  கோமதி   | Last Modified : 10 Aug, 2018 03:49 pm

in-the-spirit-of-amavasya-we-will-do-it-with-a-serious-duty

இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு நினைவூட்டுபவர்கள் நமது முன்னோர்கள். இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசிவேண்டியும் அவர்களது சந்ததியினர் அவர்களுக்கு சிரார்த்தம் செய்வது, நமது இந்து மதத்தில் கடமையாக வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது வெறும் கடமைக்காக மட்டும் செய்யாமல் சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதால் தான் அந்த கடமைக்கு சிரார்த்தம் என்ற பெயர் வைத்தனர் நம் முன்னோர்கள்.

பொதுவாக நம் முன்னோர்களுக்கு செய்யும் இத்தகைய சிரார்த்த சடங்கினை ஜீவ நதிகள் ஓடும் தீர்த்தக்கரையில் செய்வது வழக்கம். அங்ஙனம் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர். முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுக்கும்போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும்போது தான், பலன் அதிகமாகும். 

சிரார்த்த மந்திரம்

கலியுகத்தில் ஜம்புத்தீவில் பரதகண்டத்தில், ….ஆண்டில்….. அயனத்தில்… ருதுவில்…. மாதத்தில்… பட்சத்தில்… திதியில்…. வாரத்தில்…. நட்சத்திரத்தில் எனது பெற்றோரான … பெயர் கொண்டவருக்கு சிவயோக பிராப்தம் சித்திப்பதன் பொருட்டு, அவரது பிள்ளையாகிய நான் இந்த சிராத்தத்தை செய்கின்றேன்.இதனை ஏற்றுக் கொண்டு ஆசியளிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் என்பதே சிரார்த்த மந்திரம். 

பிதுர் கடன் செலுத்தி முன்னோரை வழிபட, தை மற்றும் ஆடி அமாவாசை மிகவும் முக்கியமானது. பிதுர் உலகத்தில் இருந்து ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் நம் முன்னோர்கள் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம். 
தெய்வத்தை வணங்குவதைப் போன்று நம்முடைய முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும். முன்னோர்களை வழிபடுவதற்குரிய சிறந்த நாள் அமாவாசை. மற்றைய அமாவாசைகளில், மறைந்த பெற்றோருக்கு தர்ப்பணம் செய்ய விடுபட்டு போனாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசைகளிலாவது  தர்ப்பணம் செய்ய வேண்டும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.