ஆடி அமாவாசை – பித்ருக்களை சாந்தி படுத்துவோம்

  கோமதி   | Last Modified : 11 Aug, 2018 01:21 pm

adi-amavasai-let-us-satisfy-our-ancestors

நம் குடும்பத்தில் நம்முடன்  வாழ்ந்து மறைந்த முன்னோர்களை தான் பித்ருக்கள் என்கிறோம். நம்முடைய அறியாமையால் செய்யும் தவறுகளால் ,அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாமல் அவதிப்படுவதால் வரக் கூடியதே பித்ரு தோஷம் எனப்படும்.

பித்ரு தோஷம் என்ன விளைவுகளை  ஏற்படுத்தும்?  

ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் தடைபடும்.  கணவன் மனைவியிடையே  அன்னியோன்னியம் இல்லாமல் விவாகரத்து ஏற்படலாம். சிலருக்கு குழந்தைப் பாக்கியம் இருக்காது. சிலருக்கு எப்பொழுதும் உடல் உபாதைகள் இருந்துக் கொண்டே இருக்கும். 

பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை

முறையாக பித்ரு பூஜை செய்பவர்களது ஜாகத்தில் உள்ள தோஷங்கள் அகன்று விடும் என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள். நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று  குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும் நம் முன்னோர்களின் ஆன்மா இதனால் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கும். இந்த தர்ப்பணத்தை செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் வீட்டில்,ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும் செய்து வருவது நமக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் அளவில்லாத புண்ணியங்களையும் தரும். 

பித்ரு தோஷம் எதனால் ஏற்படுகிறது? 

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் விட்டவர்களுக்கு, வீட்டில் துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு, கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாமல் போனாலும், கருச்சிதைவு செய்துகொண்டாலும் இந்த தோஷம் வரும். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது என்றால் அதன் வலிமையை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிய்ம். 

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை கண்டறிவது எப்படி?

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
ஒருவர் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தாலும் அவர்கள் பித்ரு தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

இதற்கு என்ன தான் பரிகாரம்?

ராமேசுவரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்கான  பரிகாரங்களாக சொல்லப்படுகிறது.  குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம் செய்ய வேண்டும். இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டியதில்லை.

இவ்வளவு நாள் தவறியிருந்தாலும், இனியாவது தவறாமல் நம்முடைய பித்ருக்களை வழிபட்டு நலம் பெறுவோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.