அஷ்ட லட்சுமிகளையும் மகிழ்விக்கும் வரலட்சுமி விரதம்

  கோமதி   | Last Modified : 23 Aug, 2018 12:27 pm

varalakshmi-viratham-that-makes-ashta-lakshmi-happy

பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி, செல்வத்தின் அதிபதியாக இருக்கிறாள். வாழும் காலத்தில் நாம் செய்யும் நமது  பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை நமக்கு வழங்குபவள். நித்திய சுமங்கலியான மகாலட்சுமி, கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள். பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமண தோஷத்தினால், திருமணம் தடைப்பட்ட கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வரலட்சுமி விரதம் இருப்பதால்,செல்வம், தனம்,தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும். 

தேவலோகத்தில் வசித்து வந்த சித்திரநேமி என்ற பெண் ,தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள். ஒரு சமயம் பாரபட்சமாக அவள் தீர்ப்பு சொல்ல, பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனம் கேட்டாள்.வரலட்சுமி விரதம் இருந்து தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று அன்னையும் சொல்ல,அதன்படி சித்தரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள். 

வரலட்சுமி விரதம் இருக்கும் முறை 

வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்து அதில் ஒரு பலகையை வைத்து லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்ய வேண்டும். வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். புனித நீர் நிரம்பிய கும்பத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். ஓலை, கருகமணி போட்டு; கண்ணாடி, சீப்பு, வைத்து கலசத்தில் மாவிலை தேங்காய் வைத்து, ஆபரணம் பூமாலை இவைகளால் அலங்கரிக்க வேண்டும். கொழுக்கட்டையை நைவேத்யமாக வைத்து, பூஜை செய்ய வேண்டும். பூஜைக்கு அஷ்டலட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது. கலசத்திற்கு தீபாராதனை செய்து,வீட்டின் நிலைபடியில் இருந்து  மங்களம் பாடி ஹாரத்தி எடுத்து இருசுமங்கலிகள் கைபிடித்து லக்ஷ்மி! ராவேமாயிண்டிகு என்று பாடி உள்ளே கொண்டு போய் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் நடுவில் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், பூஜியின் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.