இன்று சிவாலாயம் சென்றால் 5 வருடங்கள் தினமும் சிவாலயம் செல்லும் புண்ணியம் கிடைக்கும்

  கோமதி   | Last Modified : 22 Sep, 2018 12:00 pm

if-you-go-to-shiva-temple-today-you-will-get-the-bebefits-of-going-to-temple-5-years-every-day

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சனி பிரதோஷம் அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்களைக் காட்டிலும்,ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி மஹா பிரதோஷம்.

மஹா சனி பிரதோஷம்

தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா சனி பிரதோஷம். தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மகா பிரதோஷம் எனப்படும்.

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

இப்படி தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால் தான் உருவானது.மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரத்தையும் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.‘ஓம் ஆம் ஹவும் சவும்’ என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள், நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர்,பொய் சொல்லுதல்,கொலை செய்தல், பேராசைப்படுதல்,வீணான அபகரித்தல்,குருவை நிந்தித்தல் ஆகிய பஞ்சமாபாதகங்களினால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.

விரத வழிபாட்டு முறை

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். மாலை பிரதோஷ காலத்தில் சிவாலயம் சென்று ஒரு பிடி அருகம் புல்லை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து தொழுதிட, சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும், திருமண வரம் கிட்டும், பிள்ளைப்பேறு உண்டாகும்,வழக்கில் வெற்றி கிட்டும், கல்வி செல்வம், பொருட்செல்வம் கிடைக்கும், துன்பம் அகலும், சகல சௌபாக்கியங்களும் கிட்டும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை .

ஓம் நமச்சிவாய !

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.