தோஷங்கள் போக்கும் தேய்பிறை அஷ்டமி பூஜை

  கோமதி   | Last Modified : 02 Oct, 2018 01:20 pm

ashtami-puja-that-removes-all-the-doshas

இன்று தேய்பிறை அஷ்டமி நாள். தேய்பிறை அஷ்டமி இராகு கால நேரத்தில் நாம் ஸ்ரீசொர்ண பைரவரை வணங்கி நம் பிரார்த்தனைகளை வைக்கலாம்.ஜாதகத்தில் எத்தகைய தோஷம் இருப்பினும் இன்று மாலையில், அருகாமையில் உள்ள சிவ ஸ்தலங்களுக்கு சென்று செவ்வரளி மாலை அந்தர் அல்லது புனுகு சாற்றி வழிபடுதல் நல்லது. தயிர்சாதம் அல்லது வெண்பொங்கல் மிளகு சேர்ந்தது நிவேதனம் செய்திட வேண்டும். ஏலக்காய் மாலை 27 எண்ணிக்கை கொண்ட மாலை சாற்றி வழிபடுதல் கூடுதல் நன்மையை தரும்.இன்றைய நாள்,சித்தர்கள் ஜீவசமாதி சென்று வழிபட,சர்ப்ப தோஷம், விவாகரத்து பிரச்சினை, பெண்களுக்கு உண்டாகும் பிரச்சினைகள் தீரும்.சித்தர்களின் அனுக்கிரகம் கிடைக்கும்.

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வே ஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபித்தால் பல்வேறு நன்மைகள் அமையும் என்பது நம்பிக்கை.ஜாதக ரீதியாக சனியின் தாக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக, தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரங்களில், மூலமந்திரத்தை 330 முறை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி, அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். நம்பிக்கையுடன் செய்தால் நன்மைகள் நிச்சயம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.