நவராத்திரி ஸ்பெஷல் - நவராத்திரி மஹோற்சவம் தோன்றியது இப்படித்தான்!

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 02:06 pm
navratri-special-this-is-how-navarathri-mahotsavam-appeared

நவராத்திரி என்றாலே கொலு,ஆடல் பாடலுடன் சுண்டல் இவை தான் நம் நினைவில் வரும். இதைத்தாண்டி நவராத்திரி வழிபாடு தோன்றிய புராணப் பின்னணியை நாம் அறிந்து கொள்ளவதோடு நின்று விடாமல்,நமது பாரம்பரியம்,கலாச்சாரத்தை நமது அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்து செல்ல வேண்டியது நமது கடமையாகும்.  நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் நமக்கு மிகத்தெளிவாக உணர்த்துகிறது  தேவி மஹாத்மியம்.

புராண காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள், தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர்.ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது ஏற்கனவே இந்த அசுரர்கள் பெற்றிருந்த வரம் என்பதால்  தேவர்களும் மூவர்களும் , அசுரர்களை வதம் செய்திட அன்னை ஆதி சக்தியை வேண்டினர்.

தம் மக்களின் துயரம் கண்டு கொதித்த அன்னை ஆதிசக்தி,மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள்.மும்மூர்த்திகளும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அன்னை வசம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது என்கிறது னம் புராணம். அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அன்னை ஆதிசக்தி,அசுர வதம் முடித்த வெற்றித்திருநாளே விஜயதசமி. அசுர வதம் செய்ய,ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.ஏன் நவராத்திரி, நவ பகல் என்று  ஒன்பது பகலில் கொண்டாடலாமே..? வாழ்வின் எல்லா செயல்களுக்கும் நியதிகளை அதாவது ஒழுங்கு விதிகளை கடைப்பிடித்து வந்த காலம் அது.போருக்கென்று விதிக்கப்பட்ட சட்ட திட்டங்களின்படி, மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும் போது,அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்க அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் ஒன்பது இரவுகள் நடந்ததால், நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

ஒன்பது நாட்கள் நவராத்திரி காலங்களில் உற்றார் உறவுகளை அழைத்து அவர்களை உபசரித்து அன்னை ஆதிசக்தியை தொழுவோம். நம் அகத்தில் உள்ள அசுர குணங்களை அன்னை அழித்து நல்ல பலன்களை நமக்கு அளிப்பாள்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close