நவராத்திரி ஸ்பெஷல் -மொழி, மாநிலங்கள் கடந்து கொண்டாடப்படும் பண்டிகை!

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Oct, 2018 02:07 pm

dussehra-2018-how-is-the-end-of-navratri-celebrated-in-north-india

பாரத தேசத்தின் சமூக நல்லிணக்கத்துக்கு தனிச்சிறப்பு வாய்ந்த திருவிழாவாக நவராத்திரி பண்டிகை திகழ்ந்து வருகிறது. நவராத்திரி திருவிழா தமிழகம் மட்டுமின்றி நாடெங்கிலும் பல்வேறு பெயர்களில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக துர்கா பூஜை, தசரா என்ற பெயர்களில் கொண்டாடப்படும் பிரபலமான விழாவாக இது உள்ளது. 

நவராத்திரி திருவிழா வடமாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, வீடுகள் மற்றும் கோயில்களில் கொலு வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த விழாவையொட்டி மேற்கு வங்கம், குஜராத், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கர்பா, தாண்டியா வகை நடனங்கள் களைக்கட்டுவதுண்டு. குறிப்பாக குஜராத் மாநிலம் வதோதராவில், கர்பா என்ற நடன நிகழ்ச்சி பிரபலமானதாகும். மேற்கு வங்காள மக்கள் தங்கள் கலாசார அடையாளங்கள் மாறாமல் நவராத்திரி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

நவராத்திரியை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் 9 நாட்கள் சிறப்பாக து‌ர்கா வழிபாடு உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழர்களைப் போலவே தொன்மையான கலாசாரத்தைக் கொண்டுள்ள மேற்கு வங்க மக்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு மகிழ்ச்சியான அனுபவத்தையும், நிறைவையும் நவராத்திரி கொடுத்து வருகிறது. இப்பண்டிகையை அவர்கள் வங்காளத்தில் துர்கா பூஜை என அழைக்கின்றனர்.

சிவனை வழிபடத் தகுந்த ஒர் இரவு சிவராத்திரியாகும். அதேபோல சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது இரவுகள் நவராத்திரி என குறிப்பிடப்படுகிறது. நவம் என்பது ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும் சொல்லாகும். நவராத்திரி காலங்களில் ஹிந்துகள் விரதமிருந்து இவ்விழாவை அனுஷ்டித்து வருகின்றனர். இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்றும் கருதப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்த போதிலும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி பண்டிகை என்பதுதான் குறிப்பிடத் தக்கது.

நவராத்திரியில் பல வகை உண்டு ஆனி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வாராஹி நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மேற்கண்ட நான்கு நவராத்திரிகளில் சாரதா நவராத்திரி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. வசந்த நவராத்திரி மேற்கு வங்காளம் குஜராத் போன்ற சில மாநிலங்களிலும் வாராஹி நவராத்திரியும் சியாமளா நவராத்திரியும் சில ஊர்களிலும் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. இதேபோன்று நவராத்திரி என்ற ஒரே பெயரிடைய இந்த பண்டிகை மாநிலத்துக்கொரு மாறுபட்ட வழிபாட்டு முறையை கொண்டுள்ளது. 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.