நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி!

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 02:07 pm
navarathri-special-ambikai-s-favourite-henna

நவராத்திரி நாட்கள் நெருங்குகிறது. அசுரனை வென்ற அன்னை மகிஷாசுரமர்த்தினிக்கு ஒன்பது நாட்களில் தினம் தினம் சிறப்பு பூஜைகள் செய்ய தயாராகி வருகிறோம். அன்னைக்கு பிடித்த ஒவ்வொன்றும் மிக முக்கியமானதல்லவா. அன்னைக்கு  உகந்த வாசனை பொருட்களில் மருதாணி முக்கியமான ஒன்றாகும். நவராத்திரி பூஜைகள் செய்யும்போது அன்னைக்கு , நல்ல வாசனையோடு மருதாணி வைத்த  கைகளில் தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது அம்பிகை மனம் குளிர்கிறது.

சிரமகாலங்களில் சிக்கித்தவிக்கும் பெண்கள் தொடர்ந்து 12 வாரங்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மருதாணி வைத்த கையுடன் அம்பிகைக்கு செவ்வரளி மற்றும் சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வர துயரங்கள் அனைத்தும் தூர விலகிவிடுகிறது. மனம் நிறைந்த நம்பிக்கையை வைத்து உள்ள உடல் தூய்மையுடன் அன்னை ஆதி பராசக்தியை வேண்டிட நமது பெருங்கவலைகள் பறந்தோடிவிடும்.

பொதுவாக  அம்பாளை பூஜிக்கும் காலங்களில்  மருதாணி வைத்துக் கொள்ளலாம், நவராத்திரி காலங்களில் நமது வீட்டிற்கு  வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம்.

அம்பிகைக்கு பிடித்த பொருளை  தருவதால் அன்னையின் அருள் நிறைய பெறலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close