நவராத்திரி ஸ்பெஷல் – வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவள்

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 02:08 pm
navarathri-special-goddess-who-sits-in-the-white-lotus

நம்மை காத்து அருள்பாலிக்கும் பெண் தெய்வங்கள் பல வண்ண ஆடைகள் அணிந்து ஆபரணங்களுடன் மங்களகரமாக நமக்கு காட்சி தருகிறார்கள். எத்தனை துயரங்கள் , துன்பங்கள் மனதில்  கலங்கடித்தாலும் அன்னையின் முக தரிசனம் பார்த்த நொடியில் கவலைகள் பறந்தோடி விடும்.

பல வண்ண ஆடை உடுத்தி  அன்னையர் தரிசனம்  தரும்போது,  கல்விக்கடவுள் சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள்.இப்படி வெண்மை உடையில் அன்னை சரஸ்வதி காட்சி தருவதற்கு காரணம் உண்டு.
வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை காட்டும் முகமாகவே  ஞான வடிவான அன்னை வெண்மை வடிவ ஆடை அணிந்து காட்சி தருகிறாள்.

வானவில்லில் பலவகையான வண்ணங்கள் தென்பட்டாலும் அனைத்து நிறங்களையும் தன்னகத்தே கொண்டது வெண்மை.அத்தனை விதமான செயல்களுக்கும் அடிப்படை தேவை ஞானமும் கல்வியும் அறிவும். இந்த் குணங்களின் வடிவமாம் அன்னை கலைவாணி சரஸ்வதி வெண்ணிற ஆடையில் அருள்பாலித்து வருகிறார்.

விஜயதசமியன்று ஞானம் வேண்டி கலைவாணி சரஸ்வதியை தொழுது வணங்கிடுவோம்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close