நவராத்திரி ஸ்பெஷல் - விஜயதசமியில் சகலகலாவல்லியின் புகழ் பாடுவோம்

  கோமதி   | Last Modified : 09 Oct, 2018 02:04 pm
navarathri-special-we-will-praise-goddess-sraswati-in-vijayadasamy

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல், நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரிக்கு அடுத்த நாளான தசமியில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக விளங்கும் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரை வணங்கி அருள் பெறும் நாம், கல்விக்கடவுள் அன்னை சரஸ்வதிக்கு விஜயதசமி திருநாளில் சிறப்பு பூஜைகள் செய்கிறோம்.

சரஸ்வதி பூஜையன்று ஞானம் தரும் ஹயக்கிரீவரை முதலில் பூஜித்து, பின்னர்.வெண்தாமரையில் அமர்ந்து வெள்ளாடை அணிந்து திருக்கரங்களில் அங்குசம், வில், வஜ்ரம், கமண்டலம், சுவடி, வீணை, ஸ்படிக மாலை ஆகியவற்றுடன் பளிங்கு மேனியளாய்த் திகழும் அன்னை சரஸ்வதிக்கு பூஜைகள்  செய்யப்படுகிறது .

புதிதாக தொழில் துவங்குபவர்கள், புதிய படிப்பில் சேருபவர்கள் விஜயதசமி திருநாளன்று இந்த நல்ல தொடக்கங்களை செய்வது காலம் காலமாய் தொடரும் வழக்கம். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி அஷ்டோத் திரம், சகலகலாவல்லி மாலை போன்ற சரஸ்வதி வழிபாட்டு நூல்களைப் பாராயணம் செய்து அன்னையின் அருள் பெறலாம். 

மகிஷாசுரனை அழிக்க பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரும் ஓரு உருவமாக துர்க்கா தேவியாக உருவெடுத்து, ஒன்பது நாட்கள் விரதமிருந்து, பத்தாம் நாள் மகிஷாசுரனை வென்று மகிஷாசுரமர்த்தினியாக- வெற்றியின் திருவுருவமாக அருள்பாலிக்கிறாள். சரஸ்வதி கிருஷ்ணனின் முகத்திலிருந்து தோன்றியவள் என பிரம்ம வைவர்த்தம் நூலும், சிவசக்தி என்று கூர்ம புராணமும் கூறுகின்றன.

அன்னை துர்க்கை  புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் மகாலட்சுமியாய் அவதரித்து, சுக்லபட்ச அஷ்டமி திதியில் மகிஷனை வதம் செய்து, நவமியில் தேவர்கள் தன்னை வழிபட, விஜயதசமியன்று தேவர் களிடமிருந்து விடை பெற்று மணித்வீபம் செல்கிறாள். சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் துர்க்கை, தேவர்கள் தேஜஸ்ஸிலிருந்து தோன்றியவள் என்பதால் "ஸர்வ தேவதா' என்றும்; முக்குணங்கள் கொண்டவள் என்பதால் "திரிகுணா' என்றும் அழைக்கப்படுகிறாள்.

இந்து மதம் உலகின் பல மதங்களுக்கும் மூத்தது. ஒவ்வொரு தெய்வங்களும் காரண காரியத்துடன் அவதரித்த அற்புதங்கள்.வீரத்துக்கு துர்க்கை, செல்வத்துக்கு மகாலட்சுமி, கல்விக்கு சரஸ்வதி என மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் முப்பெரும் தேவியர் நமக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த நவராத்திரி காலங்களில் மனம் நிறைய முப்பெரும் தேவியர் புகழ் பாடுவோம். நம் வாழ்க்கை வளமாகும்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close