முன்னோர்களை வரவேற்போம் - மகாளய அமாவாசை விரதம்

  கோமதி   | Last Modified : 06 Oct, 2018 06:22 pm

welcome-to-the-ancestors-fasting-for-the-great-amavasya

மகாபாரத போரில் வீர மரணம் அடைத்த கர்ணனை மிகுந்த மரியாதைகளோடு எமன் சொர்கலோகத்திற்கு அழைத்து செல்கிறான். சொர்கத்தை அனுபவித்து வந்த கர்ணனுக்கு  சில காலம் கழித்து பசியேற்படுகிறது.  அப்போது அங்கிருந்த சக புண்ணியாத்துகளிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கர்ணன் கேட்டதும் அவர்கள் திகைப்படைந்து, இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என பதிலளிக்கிறார்கள்.

தேவ குரு பிரகஸ்பதி கர்ணனிடம் வந்து, கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது. கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார். "கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கு பசியை உணர்ந்தாய்" என்று குரு விளக்குகிறார்.

"ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்?" எனக் கேட்கிறார் கர்ணன். குரு விளக்குகிறார். "கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு சுட்டிக் காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன், உன் பசி தீர்ந்து விட்டது."

கர்ணன் உடனே எம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறார். நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித  உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார். எம தர்ம ராஜனும் அனுமதிக்கிறார்.கர்ணனும் பூலோகம் வந்து யாரும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் மகிழ்வுடன் அன்ன தானம் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.

“மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம்” என்கிறார் எமன்.

கர்ணன் " யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடைய வேண்டும் எனக் கேட்கிறார்."எமனும் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்.

மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே நம்முடைய முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்து,கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இதன் மூலம்  நம்முடைய முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.