கோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை இரண்டாம் நாள்

  கோமதி   | Last Modified : 11 Oct, 2018 12:29 pm
the-grand-navarathri-begins-the-second-day-of-worship

அம்பாள்: வராஹி

உருவ அமைப்பு: பன்றி முகம், தெத்துப் பற்கள், சூலம் உலக்கை தாங்கியவள், பெரிய சக்கரத்தைக் கொண்டிருப்பவள், தனது தெத்துப் பற்களால் பூமியை தாங்கியிருப்பவள்

குணம்: குரூரம்

சிறப்பு: ஸ்ரீஅன்னையின் சேனாதிபதி

நைவேத்யம்: தயிர்சாதம், பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம்: காலை 9 – 10.30, மாலை 6 – 7.30

மலர்: முல்லை

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்: 9

பாட வேண்டிய ராகம்: கல்யாணி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: திருவாதிரை, ஸ்வாதி, ஸதயம்

திசை புத்தி நடப்பவர்கள்: சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்

விசேஷம்: தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்

சொல்ல வேண்டிய பாடல்:

[1]துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்

பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்

கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்

 அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

[2] மூல மந்திரம்:  ஓம் - க்லீம் - வராஹி - ஹூம்பட் - நம:

[3] காயத்ரி: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close