கோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - மூன்றாம் நாள்

  கோமதி   | Last Modified : 12 Oct, 2018 10:05 am

the-grand-navarathri-begins-the-third-day-of-worship

அம்பாள்:    இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி)

உருவ அமைப்பு:  கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள்.

குணம்:  சௌம்யம்

சிறப்பு:  ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்

நைவேத்யம்: வெண்பொங்கல், வெண் பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30

மலர்:  மல்லிகை

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்:  9 அல்லது 11

பாட வேண்டிய ராகம்: ஆனந்த பைரவி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

திசை புத்தி நடப்பவர்கள்: சந்திரன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்:  லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருப்பவர்கள்

விசேஷம்: உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்

சொல்ல வேண்டிய பாடல்:

[1]மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி   

குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்

பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :

[3] காயத்ரி: ஓம் கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரஹஸ்தாயை தீமஹி தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.