கோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாள்

  கோமதி   | Last Modified : 14 Oct, 2018 04:17 pm

grand-navarathiri-begins-fifth-day-worship

அம்பாள்: மகேஷ்வரி

உருவ அமைப்பு: திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள்.

குணம்: சௌம்யம்

சிறப்பு: ஸ்ரீசிவனின் அம்சம்

நைவேத்யம்: புளியோதரை, உளுந்தன்னம் - இனிப்பு

பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30

மலர் : வில்வ இலை, மரிக்கொழுந்து

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்: 11

பாட வேண்டிய ராகம்: அடானா

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: ஆயில்யம், கேட்டை, ரேவதி

திசை புத்தி நடப்பவர்கள்:புதன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் புதன் அல்லது கேது இருப்பவர்கள்

விசேஷம்: கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

சொல்ல வேண்டிய பாடல்:

[1] ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்

போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,

காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே

[2] மூல மந்திரம்:  ஓம் - மாம் - மகேஷ்வர்யை - நம :

[3] காயத்ரி: ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.