கோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள்

  கோமதி   | Last Modified : 15 Oct, 2018 10:47 am
grand-navarathiri-begins-sixth-day-worship

அம்பாள்: கௌமாரி

உருவ அமைப்பு: மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.

குணம்: சௌம்யம்

சிறப்பு :ஸ்ரீமுருகனின் அம்சம்

நைவேத்யம்: தேங்காய் சாதம், தேங்காய் பால்

பூஜை செய்ய உகந்த நேரம் காலை: 9 - 10.30, மாலை 6 – 7.30

மலர்: செவ்வரளி

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் :7

பாட வேண்டிய ராகம்: காவடி சிந்து

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: அசுபதி, மகம், மூலம்

திசை புத்தி நடப்பவர்கள் :குரு திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள் :லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் குரு அல்லது செவ்வாய் இருப்பவர்கள் விசேஷம் சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

எண் கணிதப்படி வணங்க வேண்டியவர்கள்: பெயர் எண் 9ல் பிறந்தவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:

[1] பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்

காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு

மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!

மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

[2] மூல மந்திரம்: ஓம் - சிம் - கௌமாரியை - நம :

[3] காயத்ரி: ஓம் சிகித் வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ: கௌமாரி ப்ரசோதயாத்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close