கோலாகல நவராத்திரி ஆரம்பம் – நவராத்திரி வழிபாட்டு முறை - ஏழாம் நாள்

  கோமதி   | Last Modified : 16 Oct, 2018 01:25 pm

grand-navarathiri-begins-seventh-day-worship

அம்பாள் : ஸ்ரீமகாலக்ஷ்மி

உருவ அமைப்பு : கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் கொண்டவள்.

குணம் : சௌம்யம்

சிறப்பு : ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி

நைவேத்யம் : பால் சாதம், பால் பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம் :  மாலை 6 – 7.30

மலர் :  முல்லை, வெண்மை நிறமுடைய பூக்கள்

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் : 11

பாட வேண்டிய ராகம் :  கல்யாணி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் : பரணி, பூரம், பூராடம்

திசை புத்தி நடப் பவர்கள் : சுக்ர திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள் : லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சுக்ரன் அல்லது சனி இருப்பவர்கள்

விசேஷம் : சகல சம்பத்தையும் தருபவள், செல்வத்தை அளிப்பவள், அன்புக்கு அடிபணிபவள்.

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 6 உடையவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:

[1] தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்

விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ

பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப்  பைங்கிளியே

[2] மூல மந்திரம்:  ஓம் - லம் - லக்ஷ்மியை - நம :

[3] காயத்ரி:  ஓம் மஹாதேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்யைச தீமகி தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.