கங்கை கொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம்...

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 04:19 am
annabishegam-in-gangaikonda-sozhapuram-temple

பிரசித்தி பெற்ற வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீஸ்வரருக்கு 508 கிலோ அன்னத்தால் "அன்னாபிஷேக விழா" நடைபெற்றது. திரளான பக்தர்கள் 'நமசிவாய' மந்திரம் முழங்க தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் .

வானர அரசரான வாலி இத்திருக்கோவில் உள்ள ஈஸ்வரனை வழிபட்டு சென்றதால் இவ்வூர் வாலிகண்டபுரம் என்று அழைக்கப்பட்டது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோவிலில் அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அருள்மிகு வாலீஸ்வரருக்கு  பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட 508 கிலோ அரிசி சாதத்தால்  வாலீஸ்வரருக்கு மூலவரில் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளுக்கு பிறகு அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது.

ஐப்பசி மாதத்தில் உள்ள பெளர்ணமியன்று சிவபெருமான் நமக்கு அன்னமாக காட்சி அளிப்பது ஐதீகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த அன்னாபிஷேக விழாவில் கலந்து கொள்வதன் மூலம் உணவு பஞ்சம் ஏற்படாது என்பதால் இந்த "அன்னாபிஷேக விழாவில் " சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான Uக்தர்கள் கலந்து கொண்டு " பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close