தலை தீபாவளி தம்பதியர் இந்த நேரத்தில் கங்கா ஸ்நானம் செய்வது உத்தமம்

  கோமதி   | Last Modified : 05 Nov, 2018 09:04 am
best-time-for-newly-married-couples-to-take-ganga-snanam

“தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து நீராடி மகாலட்சுமியைப் பூஜை செய்து, தீபங்களை வீட்டின் பல இடங்களில் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்” என விஷ்ணு புராணம் கூறுகிறது.தீபாவளி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகைக்கு முன்பாகவே நீராட வேண்டும். அன்றைய தினம் எண்ணெயில் திருமகளையும், வெந்நீரில் புனித கங்கையையும் வரப் பண்ணி நீராட வேண்டும். இதையே “தைலே லஷ்மி, ஜலே கங்கா” என்று சொல்வது வழக்கம்.

தீபாவளியன்று தேய்த்துக்குளிக்க வேண்டிய எண்ணெயை முதல்நாளே சிறிது அரிசியும், கொஞ்சம் ஓமமும் சேர்த்து காய்ச்சி வைத்துவிட வேண்டும். அரிசி மகாலட்சுமியின் அம்சம்.அன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.தீபாவளி திருநாளில் கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரத்தை நமது Newstm அன்பர்களுக்காக கணித்துக் கொடுத்துள்ளார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர். 

நரக சதுர்த்தசி நோன்பு: 06.11.2018 - செவ்வாய்

காலை மணி 6.00 - 7.30 - விருச்சிக லக்னம்

மதியம் மணி 1.30 - 3.00 - கும்ப லக்னம்

நரக சதுர்த்தசி குளியல்: 6.11.2018 - செவ்வாய்

06.11.2018 அன்று காலை 2.39 - 4.38 வரை கன்னியா லக்னத்தில் நரக சதுர்த்தசி ஸ்நானம் செய்ய உத்தமம்

தலை தீபாவளி தம்பதியருக்கான கங்கா ஸ்நானம்:

06.11.2018 அன்று காலை 4.38 - 6.38 வரை துலா லக்னத்தில் தலை தீபாவளி தம்பதியர் ஸ்நானம் செய்து, முன்னோர்களை வணங்கி, வீட்டிலுள்ள பெரியோர்களை நமஸ்காரம் செய்து, புத்தாடை அணிந்து தீபாவளியை கொண்டாடுவது சிறந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close