உடலையும் உள்ளத்தையும் மேம்படுத்தும் சஷ்டி விரதம்(08.11.18 முதல் 13.11.18 வரை )

  கோமதி   | Last Modified : 07 Nov, 2018 10:13 pm

sashti-viratham-that-enlightens-your-body-and-soul-from-08-11-18-to-13-11-18

சுற்றி வருகுது வேல்

தூர விலகு பகையே.....கையில் வேல் கொண்டு குன்று தோறும் குடிக்கொண்டிருக்கும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான், தன்னை நாடி வரும் அடியார் கூட்டத்தை காத்து நிற்கிறார்.

முருக வழிபாட்டில் மிக முக்கியமான நாட்கள் சஷ்டி விரத நாட்கள்.  உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்கிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும். அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.உண்ணா நோன்பு நல்ல  ஆரோக்கியத்தை  பெறும் இது அறிவியல் உண்மை.நமது முன்னோர்கள் இறை நம்பிக்கையுடன் வாழ்வியல் தத்துவங்களை நடைமுறைகளை பின்னிப் பிணைத்திருக்கிறார்கள். இதற்காக ஆண்டில் ஆறு  நாட்களைத் தேர்வு செய்துள்ளனர். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்துள்ளனர்.தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் கொண்டாடப்படுகிறது.எப்படி ஒவ்வொரு நாளும் முருகன் சக்தி பெற்று ஆறாவது நாள் அசுரனை வதம் செய்கிறாரோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது 'நோய் எதிர்ப்பு சக்தி' வலிமையடைந்து 'டெங்கு போன்ற எந்த வைரஸ் கிருமிகள், நோய்கள் இருந்தாலும் வதம் செய்துவிடும். உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் உண்ணா நோன்புடன் அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.

கந்த சஷ்டி  விரதம்  இருக்கும் வழிமுறைகள் 

முதலில் சக்தி வேல்முருகன் பெயரை இதயத்தாலும் வாய் முழுக்கவும் மந்திர ஜபம் போல உச்சரித்துக் கொண்டு இருக்க வேண்டும் இதுவே சஷ்டி விரதத்தின் முதல் படி.முடிந்தவர்கள் ஆறு நாட்களும் தண்ணீர் மட்டும் குடித்து  சஷ்டியை கடைப்பிடிக்கலாம்.
பாலும், பழமும் மட்டும் உண்டும் சஷ்டியை தொடரலாம்.ஒரு சிலர் ஆறு நாட்களுமே  வெறுன் பழங்களை மட்டும் உண்டு  சஷ்டி விரதத்தை கடைப்பிடிபதும் உண்டு. இந்த வழிமுறைகளில் எது நமக்கு சாத்தியமோ முறைப்படி இருக்கலாம்.உடல் நலன் சற்று பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்க நினைத்தால் எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். உதாரணத்திற்கு பழங்கள், இளநீர்,காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.இதன் விளைவாக,சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.மலம் கருப்பாக வெளியேறலாம். சளி வெளியேறலாம். உடல் களைத்துப் போய்,காய்ச்சல் கூட வரலாம். 

சஷ்டி விரதத்தினால் நம் உடல் பெரும் நன்மைகள் 

அதிக உடல் எடை சீராகிறது. முகம் பொழிவு பெறுகிறது.நமது உடலில்  சுறுசுறுப்பு அதிகரிக்கிறது. உடலில் ஓடும்இரத்தம் தூய்மையடைகிறது. தோலின் நிறம் சீராகிறது. மேலும் மன உளைச்சல் குறைவதுடன்,  கவலை, பயம், கோபம் நம்மை விட்டு விலகிவிடுகிறது. இதனால உடலும் உள்ளமும் புத்துணர்வு பெறுவதுடன் உடல் பலம் பெறுகிறது.

கந்தப்பெருமான் சூரசம்ஹாரத்தில் அசுரனை  அழித்து விடுவதைப் போல சஷ்டி விரதம் நம் உடலில் காணப்படும் நச்சுக்களை ஒழித்து விடுகிறது .இந்து தர்ம  பண்பாட்டையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. இரண்டும் இரண்டறக் கலந்தது. வரும் சஷ்டி காலத்தில் முருகப்பெருமான் புகழ் பாடி சஷ்டி விரதம் மேற்கொள்வோம். உடல் உள்ளம் இரண்டையும் மேம்படுத்திக் கொள்வோம்.

ஓம் முருகா ..கந்தா... கடம்பா போற்றி போற்றி!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.