• குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை, காஞ்சிபுரத்தில் சிபிஐ ரெய்டு
  • ஆர்.கே.நகர் தேர்தல் மோசடி; எஃப்.ஐ.ஆரில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் எங்கே? - உயர்நீதிமன்றம் கேள்வி
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • திருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு
  • மத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி!

மும்மலங்களை அகற்றும் கந்த சஷ்டி பெருவிழா ( இரண்டாம் பாகம் ) சூரனை ஆட்கொண்ட சேவல்கொடியோன்

  கோமதி   | Last Modified : 13 Nov, 2018 05:53 pm

kandasashti-festival-second-part-murugan-suceeds-suran

https://www.newstm.in/news/devotional/worship/48851-kandasashti-festival-first-part-who-is-this-surabhatma.html?

தோல்வியில் முடிந்த தூது 

முருகப் பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின் போது,வீரவாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூரனிடம் தூது உரைக்கின்றான். சூரனின் ஆணவத்தால் தூது முறிகின்றது. வீரவாகுதேவர் திருச்செந்தூர் திரும்பி வந்து முருகனிடம் நடந்த நிகழ்வுகளை முன் வைக்கிறான்.கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி “தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்லவேண்டும்.அவரவரது வாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்” என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.

பிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும்,வீரபாகு தேவரும் லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள். வானவர்கள் பூ மழை பொழிந்தார்கள்.முருகப் பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்ற போது, பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் கந்தனை வணங்கி, “மகா பாவியாக உள்ள சூரபன்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்  செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்” என்று வேண்டிக்கொண்டார்கள். சுவாமி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்.

தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், மூத்த மகன் தான் இருக்க தந்தை போருக்கு செல்வது சரியில்லை என பானுகோபன் தான் போருக்குச் செல்ல அனுமதி தரும்படி சூரனிடம் வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை ஆசீர்வதித்து போருக்கு அனுப்பி வைக்கின்றான். பானூகோபன் மாயாஜால வித்தைகள் செய்து போர் செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். நீதியாக நடப்பவன். இறுதியில் பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியாகிறான்.

சிங்கமுகனின் முடிவு

பானுகோபன் பலியாக சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்குச் செல்கின்றான். இவனது சிரம் விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய சிரம் தோன்றும் வரம்பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல் கொண்டு கொல்லாது குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சங்காரம் செய்கின்றான்.

சூரனின் சம்ஹாரம்:

சூரன் சிறந்த சிவபக்தனாக இருப்பினும் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டு அதர்மவழியில் சென்று தன் அழிவை தேடிக் கொண்டான். தன் சொந்த பந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்துசெய்வதறியாது நின்ற சூரன், தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெருமான் முன்தோன்றினான். முருகன் சூரனை நோக்கி தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். தன்னுடன் போர்செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும்,சூரன் ஆணவமிகுதியால் தொடர்ந்து போராடினான். கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை, இருகூறாக்கி சங்காரம் செய்தது.

தன்னுடைய இறுதி நேரத்தில்,ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து,தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நின்றான். அவன் மேல் இரக்கம் கொண்டு, பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

நாளென் செயும்வினை தானென்

செயுமெனை நாடி வந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென்

செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந்

தண்டையுஞ்  சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்கு

முன்னே வந்து தோன்றிடினே.

இன்று நம் மனதில் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் அசுரர்களை மனமென்னும் ஞானவேல் கொண்டு சம்ஹாரம் செய்து நற்கதி அடைவோம்.

வேலுண்டு வினையில்லை....

மயிலுண்டு பயமில்லை....

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.