வீட்டில் இதை பாராயணம் செய்யுங்கள், மகாலட்சுமி வாசம் செய்வாள்

  கோமதி   | Last Modified : 19 Nov, 2018 05:21 pm
pray-this-at-home-goddess-mahalakshmi-will-reside

இராமாயணம் மகாபாரதம் இதிகாசங்கள் வெறும் புராணக்கதைகள் அல்ல. இறைவனின் அவதாரப் பெருமைகளை விளக்கி அதை  நமது வாழ்க்கைக்கு பயன்படும் தத்துவங்களாக உணர்த்தும் உன்னதப் படைப்புகள். சுந்தர காண்டம் ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ளது .  இதை பாராயணம் செய்ய, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளும் பகலவனைக் கண்ட பனிப் போல் உருகிவிடுகிறது. இது பலரின் அனுபவ உண்மை.எவர் ஒருவர் வீட்டில் தினந்தோறும்  சுந்தர காண்டம் பாராயணம் செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். மங்களம் பொங்கும்.

அனுமனின் செயல் திறத்தை சுந்தர காண்டம் முழுவதிலுமே மிக அற்புதமாக விளக்கி சொல்லியிருப்பதை காணலாம். அனுமன் பராக்கிரமத்தை சொல்லும் சுந்தர காண்டத்தை படிப்பதினால் ஏற்படக்கூடிய நன்மைகள் சொல்லில் அடங்காது.மொத்தம் 24,000 சுலோகங்கள் கொண்ட இராமாயணத்தில், சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 சுலோகங்கள் 68 அத்தியாயங்களில் இடம் பெற்றுள்ளன.வேத பாராயணம் செய்த பலனை சுந்தரகாண்ட பாராயணம் செய்வதன் மூலம் அடைய முடியும்.

சுத்தர காண்டத்தை எப்படி பாராயணம் செய்யலாம் ?

68 அத்தியாயங்கள் கொண்ட இந்த காண்டத்தை இயலுமானால் ஒரே நாளில் படித்து முடிக்கலாம். அல்லது ஒரு நாளைக்கு ஒரு சுலோகம் என்ற முறையிலும் படிக்கலாம். ஆனாலும் ஒரு நாளைக்கு 7 அத்தியாயங்கள் வீதம் இதை 68 நாட்களில் ஏழு முறை படிக்கக்கூடிய 7 அத்தியாய பாராயணம் வேறு எல்லா முறைகளையும் விட நாம் கேட்கும் பலன்களை அள்ளித் தரக்கூடியது.பாராயணம் ஆரம்பிக்கும் முன்னர் படிக்க வேண்டிய சுலோகங்கள் என சில உள்ளது. அதைப் படித்து,பின்னர் ஏழு அத்தியாயங்களையும் முடிந்தவுடன் இறுதியில் படிக்க வேண்டிய சுலோகங்களையும் அன்றாடம் படிப்பது வழக்கமாக இருக்கிறது.

ராவணனின் கொடுமைகளால் மனம் தளர்ந்து இருந்த சீதைக்கு,  ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்த சுந்தரகாண்டத்தின் 68 அத்தியாயங்கள் படித்து முடிக்கும் போது, யுத்த காண்டத்தின் 131-வது அத்தியாயமான ராம பட்டாபிஷேக அத்தியாயத்தையும் படிக்க வேண்டும் என்பது சான்றோர்கள் சொல்லிச் சென்ற மரபாகும். சிலருக்கு ஜாதகத்தில் தோஷங்கள் இருந்து கெடு பலன்களைக் கொடுக்கும். அப்படிப்பட்டவர்கள், பெரியவர்களை கேட்டு தெரிந்துக் கொண்டு, முறைப்படி சுந்தரகாண்ட பாராயணம் செய்வதால், தோஷ நிவர்த்தி பெறுவதோடு எல்லா நலன்களையும் பெற முடியும்.

சுந்தரகாண்டம் பாராயணம் அள்ளி தரும் பலன்கள்:

சுந்தரகாண்ட பாராயணம், பகவானை எளிதாக நாம் நெருங்குவதற்கான வழிமுறையாகும்.

சுந்தரகாண்டத்தை படிக்கப் படிக்க வாழ்க்கையில்  உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.மேலும் வாழ்வு வளம் பெறும். திருமண தடைகள் நீங்கி திருமணம் விரைவில் கை கூடும்.

சுந்தரகாண்டம் பாராயணம் செய்து கொண்டு அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் அடையலாம்.

ஆஞ்சநேயருக்கு வடை, வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சனியின் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஜெய பஞ்சக ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

ராமாயணத்தில் உள்ள 24 ஆயிரம் சுலோகங்களில், 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறன. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு நிச்சயம் கூடாது.

ஸ்ரீ ராம ஜெய ராம... ஜெய ஜெய ராமா

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close