திருப்பாவை - 4

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 19 Dec, 2018 05:15 pm
thiruppaavai-4

ஆழி மழைக் கண்ணா… இங்கே கோவர்த்தன கிரி நாதனாகிய கண்ணன் அழைக்கப்பட்டிருக்கிறார். அவரோ பெரும் மழையிலிருந்து மக்களைக் காத்தவர். அவரிடம் போய் கடலிலிருந்து எல்லா நீரையும் முகர்ந்து வந்து உன் மேனி போல கருத்த மேகங்களை விட்டு பொழியச் சொல் என்று சொல்வது முரணில்லையா? அப்படியெல்லாம் பெய்தால் பூமி தாங்குமா? அதுவுமில்லாமல், போன பாசுரத்தில் “ தீங்கின்றி நாடெல்லாம் மாதம் மும்மாரி பெய்ய” வேண்டி விட்டு அடுத்த பாசுரத்திலேயே இப்படி மாற்றிக் கேட்பாரா கோதை நாச்சியார்? 

இங்கே ஆண்டாள் குறிப்பிடுவது நீர் மழையை அல்ல. கருணை மழையை என்பது அடியேனின் சிற்சிந்தனை. நாராயணனின் பாற்கடல் என்பது கருணை நிறைந்தது. அந்தக் கடலில் போய் முகர்ந்து வந்து உலக மக்கள் மீது பொழியுமாறு வேண்டுகிறார்.  மழைப் பிரளயத்தில் மனிதர்களைக் காத்துக் கொடுத்த நன்றியை வெளிப்படுத்தி அது போலவே, உன்னைப் போலவே கருநிற மேகமான கருணை மேகத்தைக் கொணர்ந்து வாய் நிறைய ஆசிர்வதித்துப் பொழிய உதவ வேண்டுகிறார்.

பிரபஞ்சத்தைப் படைத்த நாபிக்கமலனின் பெருமை பொருந்திய தோளின் இருபுறமும் அழகு சேர்க்கும் சுதர்சன சக்கரமும் வலம்புரி சங்கும் இருக்கின்றன. அந்த சக்கரம் போல் எங்கள் வாழ்வில் ஒளி வீசி, வெண்சங்கு எங்கள் வாழ்வில் பிரணவ மந்திர ஒலி அதிர்வை உண்டாக்கட்டும்.

நாராயணனின் சாரங்கம் தீயவனவற்றை அழிக்க அம்பு மழையைப் பொழிந்தது போல் எங்கள் வாழ்வில் வரும் தீயனவற்றை உமது கருணை மழை அழித்தருளட்டும்.

இதெல்லாம் விரைவில் நடக்கப் போகிறது என்பதை நினைத்து மகிழ்ந்து கொண்டே மார்கழி நீராடப் போகலாம்.

 “ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் “

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close