திருப்பாவை – 6

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 21 Dec, 2018 12:00 am

thiruppaavai-6

முதல் ஐந்து நாட்கள், நோம்பிருக்கணும், நோம்பிருக்கும் முறை என்ன?, வையத்து மக்கள் உணவுக்கு எப்படி மழையை வேண்டணும்? மக்களின் மனதுக்கு எப்படி கருணை மழையை வேண்டணும், வேண்டுதலுக்கு எப்படி கண்ணனை பூஜிக்கணும் என்று முறையாகச் சொல்லிக் கொடுத்தார் ஆண்டாள் தாயார். 

சொன்னது மட்டும் போதுமா? செயல்படுத்த வேண்டாமா? அப்போ முதலில் தூக்கத்திலிருந்து எழணும் இல்லையா அப்படி எழுப்புவது தான் இந்தப் பாசுரம் தொடக்கமாகப் பத்துப் பாசுரங்கள். பெற்ற தாய் பாடித் துயில் செய்குவார். ஆண்டாள் தாய் பாடித் துயிலெழுப்புகிறார். வெறும் தூக்கத்திலிருந்து எழுப்பவா பூமாதேவி கோதை அவதாரம் பூண்டு வந்தார்? இது சாதாரணத் தூக்கத்திலிருந்து எழுப்ப அல்ல. உலக மாயையிலிருந்து விழித்தெழ நம்மைப் பாடி எழுப்புகிறார். எதை எல்லாம் கவனிக்காமல் மயக்கத்தில் இருக்கிறோம் என்று படிப்படியாகப் பாருங்கள்…

ஐந்தறிவுள்ள பறவையான கருடன் கூட தன் அரசனான நாராயணனைத் துதித்து அவன் சேவையில் இருக்கிறது பார்…

நாராயணன் கையிலிருக்கும் வெண்சங்கின் ஓசை பிரணவ மந்திரமாகப் பிரபஞ்சம் முழுக்கக் கேட்கிறதே உனக்கு மட்டும் இன்னும் கேட்கவில்லையா?

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் உலக உயிரையெல்லாம் படைத்த நாராயணனின் குழந்தைகளே எழுந்திருங்கள் நம்மை நோக்கி வரும் பூதனைகளிடம் இருக்கும் நஞ்சினைத் தானே உண்டும், 
 
நம்மை இந்த  உலகவாழ்க்கைக்குள் சுழற்றிக் கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கைச் சக்கரத்தினை உதைத்து விரட்டக் கூடிய கண்ணனை, நாராயணனை மனதின் உள் கொண்டு

முனிவர்கள் யோகிகளைப் போல ஹரி என்ற நாராயணனின் பெயரை மனம் முழுவதும் ஒலிக்கச் செய்து மெல்ல விழிப்புணர்வு கொள்ளுங்கள் என்று மாயையிலிருந்து எழுப்புகிறாள் கோதை நாச்சியார்.

 “புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் “

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.