திருப்பாவை – 8

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 23 Dec, 2018 12:48 am
thiruppaavai-8

கீழ்வானம் வெளுத்திருத்திருச்சு என்பது, காலைப் பொழுது விடிய அறிகுறிகள் தெரிந்து விட்டது என்பது வெளிப்பொருள். பரமபதம் செல்லும் ஜீவாத்மாவை வழி நடத்த அர்ச்சிஸ் என்ற வெளிச்சம்  வருமாம். பரமபதம் என்பது சரணாகதி அடைந்தவர்களுக்கே கிடைக்கக் கூடியது. அந்த வெளிச்சம் தெரியுது பார்… 

எருமை சிறுவீடு மேயத் தொடங்கி விட்டது என்பது வீட்டின் கொல்லைப்புறத்திலிருக்கும் பனிநிறைந்த புற்களை மேயத் தொடங்கி விட்டது. அதாவது மேய்ப்பவன் மேய்க்கச் செல்வதற்கு முன், தன் முன்பசியை ஆற்றிக் கொள்ள எருமைகள் ஆரம்பித்து விட்டன என்பது வெளிப்பொருள். பெருமாள் உன்னை அழைத்துக் கொள்ளுமுன், எமன் தன் முன் பசிக்கு மேய்ந்து உன் வயோதிகம் தெரிய ஆரம்பித்து விட்டது.

சரணாகதி அடைந்தவர்கள் எல்லாரும் அவர்கள் மட்டும் செல்லாமல்,  அதன் சூட்சுமத்தை உனக்கும் கற்றுக் கொடுத்து விட்டு பரமபதம் செல்லக் காத்திருக்கின்றனர். இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ந்து திளைத்து ஆனந்தமாகத் தெரியும் குழந்தையே (பர அறிவில்) 

எழுந்திரு! கேசிஹந்தா என்ற குதிரை அரக்கன் வாயைப் பிளந்தவனும், சாணுரன் முஷ்டிகன் எனும் மல்லர்களை கொன்று பெண்களைக் காத்தவனாகிய தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய நாராயணனை வேண்டிப் பாடினால் , நம் ஏக்கங்களைப் புரிந்து கொண்டு ஆ..ஆவென்று விரைந்து அருளி முக்தி கொடுப்பான்.

 “கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். “

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close