திருப்பாவை – 9 

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 24 Dec, 2018 11:20 am
thiruppavai-9

தூமணி மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய.. காலைல வெயிலடித்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தலையையும் சேர்த்து போர்த்திக் கொண்டு தூங்குபவர்களைப் போல, வெளியே ஞான ஒளி சுற்றிலும் இருக்கிறது. ஆனால், நல்ல மணம் வீசும் புகைகள் சூழ, தூக்கத்திற்காகவே செய்யப்பட்ட  ஒரு மெத்தையில் இன்னும் தூங்கிட்டிருக்கும் மாமன் மகளே உன் கதவைத் திறந்து வெளியே வா. 
அதாவது, புகை எனும் மாயை உன் கண்களை மறைத்திருக்கிறது. உலக சுகத்தில் லயித்து கண்ணை மூடிக் கொண்டிருக்கிறாய். மனம், புத்தி எனும் மணிக்கதவைத் திறந்து பார் என்று அழைக்கிறார்.

அவள் தான் தூங்குகிறாள் என்றால், அவளைப் பெற்ற தாயாவது உண்மையைச் சொல்லி எழுப்பி விடக் கூடாதா? உங்கள் மகள் என்ன ஊமையா நாராயணன் புகழ் பாட வராமல் இருக்கிறாளே? இல்லை உங்கள் மகள் செவிடா? இத்தனை நல் வழிகள் சொல்வது அவள் காதில் புகாமல் இப்படித் தூங்குகிறாளே? இப்படி  உலக வாழ்க்கையில் மயங்கித் தூங்கியே இப்பிறப்பைப் போக்கும் அளவுக்கு ஏதேனும் சாபம் பெற்றுக் கிடப்பவளோ? எழுந்து வரச் சொல்லுங்க… 
மகாலக்ஷ்மியுடன் வீற்றிருக்கும் மாதவனை, வைகுண்டநாதனை மகிழ்ந்து அவன் நாமங்களை  உறக்கச் சொல்லி வேண்டினால், இந்த பெருந்தூக்கத்திலிருந்தும், சிற்றுலக மாயையிலிருந்து  மீட்டும் முக்தி கொடுக்கவல்லவன் மாபெரும் மாயனாகிய நம் நாராயணன். 

 “தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்”

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close