திருப்பாவை – 11

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 25 Dec, 2018 11:10 pm
thiruppaavai-11

கிருஷ்ணர் பசுக்களை மேய்த்தார் என்பதே ஓர் உருவகம் தான். பசு – பதி ஜீவாத்மா பரமாத்மா. பசுக்கள் என்றால் அவனால் படைக்கப்பட்ட, அவனுடைய செல்வங்கள். நாம் தான். நாம் என்றால் படைத்தவனைத் தவிர மற்ற எல்லாமே. இதில் உயிருள்ளவை உயிரற்றவை என்று கணக்கெல்லாம் நமக்கு தான். இறைவனுக்கு அவன் படைத்தது எல்லாம் ஒன்றே. 

பசு என்பதை பூமி போன்ற ஒரு கோள் என்றால்,  பசுக் கூட்டம் என்பது ஒரு பால்வீதி என்று கொள்வோம். அப்படி எண்ணிலடங்கா பசுக்கூட்டங்களைக் மேய்த்து, அதாவது படியளந்து வருபவனும், தன்னால் படைக்கப்பட்ட பசுக்கூட்டங்களுக்கு துன்பம் நேர்கையில் வரும் துன்பத்தை அழித்து அனைவரையும் காப்பவனுமாகிய பிரபஞ்ச நாயகனின் பிள்ளை தான் நீயும். அதனால் தான் பொற்கொடி போல் விளங்குகிறாய். 

புற்றில் வாழும் பாம்பினைப் போன்ற இடையுடையவளே! மயில் போன்ற அழகுடன் விளங்குபவளே… பாம்பின் குணத்தையும் அதன் எதிரான மயிலின் குணத்தையும் ஒருங்கே கொண்டு முழுமையான செழிப்புடன் படைக்கப் பட்ட பெண்ணாக இருக்கிறாய். எழுந்து வா!

இத்தனை அற்புதமாக உன்னைப் படைத்த கார்வண்ணனின் புகழ் பாடி அவனை அடையாமல், இப்படி ஆடாமல் அசையாமல் பெருந்தூக்கம் தூங்கி என்ன காணப் போகிறாய்? உன்னை வழி நடத்த இத்தனை பேர் காத்திருக்கிறோம் எழுந்து வா செல்வ மகளே என்று அழைக்கிறார்.

 “கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம்

பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.”

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close