திருப்பாவை  - 14 

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 29 Dec, 2018 02:27 pm
thiruppaavai-14

ஒவ்வொரு பெண்ணையும் அவர்களின் இயல்புக்கேற்பச் சொல்லி எழுப்புவதாகச் சொல்லலாம். அல்லது இப்படியான இயல்பினுள் இருப்பவர்களை, இப்படி எழுப்பணும் என்றும் புரிந்து கொள்ளலாம். இங்கே, மனம் நிறைய செந்தாமரைக் கண்ணனை வரித்துக் கொண்ட பெண். ஆனால், அவளுக்கு எப்படி அவனை நிஜமாக அடைவது என்று தெரியாமல் இவ்வுலகின்பத்தில் லயித்துக் கிடக்கிறாள்.  அவளைத் தான் எழுப்புகிறார்கள்.

உன் மனமெனும் சிறு குளத்தில் செந்தாமரை மலரத் தொடங்கி விட்டது. அதாவது நாராயணனை அடைய மனம் பக்குவமடையத் தொடங்கி விட்டது. ஆம்பல் மலர் எனும் சிற்றின்ப நாட்டம் வாய் மூடிப் போயிற்று. உனக்கான விடியல் தொடங்கிற்று.

சம்சார வாழ்க்கையைத் துறந்த, வெண்மையான பற்களை உடைய சந்நியாசிகள் காவியுடை உடுத்தி தங்கள் திருக்கோவிலைத் திறக்கச் சென்று கொண்டிருக்கின்றனர். அதாவது முக்தி விரும்பும் சந்நியாசிகள் என்பவர்கள் மனம் விரும்பும் கண்டதையும் சாப்பிட மாட்டார்கள். உடலில் உயிர் இருப்பதற்குப் போதுமான அளவே சாப்பிடுவார்கள். அதுவும் சமைக்காத காய்கள் பழங்களை மட்டும் சாப்பிடுவார்கள். ஆகையால், அவர்கள் பற்கள் மஞ்சள் பூத்து இல்லாமல் வெண்மையாக இருக்கும். 

அப்படியான சந்நியாசிகள் தங்கள் மனமெனும் திருக்கோவிலை, ஞானமெனும் சாவி கொண்டுத் திறக்கச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதுவும் எப்படி? சங்கினை ஊதிக் கொண்டு. சங்கொலி என்பது பிரபஞ்ச ஒலி எனும் பிரவண மந்திரத்திரத்தை உச்சரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

அவர்களைப் பின்பற்றி நாமும் செல்வோம் என்று எங்களுக்கு ஆசை காட்டி அறிவுறுத்தி விட்டுப் போன போது உன்னை மிகச் சிறந்த குணங்களைக் கொண்ட பெண் என்றிருந்தேன்.  இப்பொழுது நீயே இப்படி கிளம்பாமல் சோம்பிக் கிடக்கிறாயே வெட்கமாக இல்லையா? 

சங்கு சக்கரங்களைத் தன் திருக்கைகளில் தரித்த நம் பெருமான், செந்தாமரைக் கண்களுடைய  நாராயணனைப் பாடித் துதிக்கச் செல்ல வேண்டும் எழுந்திரு!

 “உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் “

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close