திருப்பாவை – 16

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 30 Dec, 2018 04:49 pm

thiruppaavai-16

இது வரை முக்தியடையும் வழிகளைச் சொல்லி, பெண்களை எல்லாம் எழுப்பியாகி விட்டது. பெருமாளைப் பாடப் போகலாம் என்று சொல்லித்தானே எழுப்பி வந்தோம். தூங்கிட்டிருப்பவரிடம் சரணாகதியடைய முடியுமா? அப்ப அவரை எழுப்பணும். நேரா போய் எழுப்பிட முடியுமா? கண்ணனை எழுப்ப நேர்த்தியான முறை இருக்கிறது இல்லையா? எப்படி என்று பார்ப்போம்.

கோகுலத்தின் தலைவனாகிய நந்தகோபருடைய கோவிலைக் காப்பவனே. இங்கே கோவில் நாயகன் நந்தகோபர் இல்லை. நந்தகோபருக்கே கோவிலாக இருப்பது கண்ணனின் வீடு. அந்த வீட்டினைக் காக்கும் நந்தகோபரே! 

கோவிலின் முகப்பிலுள்ள கொடியில் வீற்றிருக்கும் கருடாழ்வாரே!

எங்களை அடைக்கலமாக ஏற்கவல்ல மாயவனின் திருக்கோவிலின் உயர்ந்த கதவினைத் திறக்க வேண்டுகிறோம்.

ஒன்றுமறியாத சின்னஞ்சிறு பெண்களாகிய எங்களுக்கு நல்லொலியிடன் கூடிய முக்தியைத் தருவதாக  நீலமணி வண்ணமுடைய நாராயணன் வாக்களித்திருக்கிறார். அளித்த வாக்கினைப் பெற வந்தால் மாயன் இன்னும் துயில் கொண்டிருக்கிறான். பரவாயில்லை. அப்படி உறங்கும் மாயனைப் புகழ்ந்து பாடி அவனைத் துயில் எழுப்ப மடந்தைகளான நாங்கள் எங்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டு வந்திருக்கிறோம். 

கதவைத் திறந்து எங்களைச் சேவை செய்ய அனுப்பப் பிராத்திக்கிறோம். முதன் முதலாக உங்களிடம் தான் எங்கள் பிராத்தனையை வைத்திருப்பதால், எங்கள் மீது கருணை கொண்டு, மறுப்பேதும் சொல்லாது கதவைத் திறக்க வேண்டும். 

 “நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.”

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.