திருப்பாவை – 19

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 02 Jan, 2019 04:16 pm

thiruppaavai-19

திருப்பாவை பெண்குழந்தைகள் பாடுவதற்காக சிறப்பான பாசுரங்கள். அப்படியான பாசுரத்தில்  “நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா” என்ற வரி வருகிறதே? குழந்தை கேட்டால் என்ன விளக்கம் சொல்வது என்ற தயக்கம் நிறைய பெற்றோர்களுக்கு உண்டு. முதல் வரியைச் சரியாக விளக்கி விட்டால் அடுத்தடுத்த வரிகளில் குழந்தைகள் எதார்த்தம் புரிந்து கொள்வர்.

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்…

இங்கே குத்து விளக்கு என்பது நிலையான விளக்கு என்று பொருள். விளக்கு என்பது வெளிச்சம் தருவது. அதாவது நம் அறியாமை இருளைப் போக்கி ஞானம் தருவது.. எது ஞானம்?
 
பெருமாளும் தாயாரும் கட்டிலில் சயனித்திருக்கிறார்கள் படைப்புத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். எப்படி?  “மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி… உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் பஞ்சபூதங்களின் கலவையே! ஒன்றோ, இரண்டோ ஐந்துமோ கலந்த படைப்புகள் தான் உயிர்கள். அனைத்தும் அதனால் தான் அழியக் கூடியதாக இருக்கிறது என்று பாகவதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 

பகல் பொழுதெல்லாம் தாயார் மகாலக்ஷ்மியை தன் மார்பிலேயே சுமந்திருக்கிருக்கும் நாராயணன் இரவில் தாயாரின் மார்பில் மையல் கொள்கிறார். இது படைத்தலின் இயல்பு தானே? இப்ப கோதை நாச்சியார் நாராயணனை வேண்டுகிறாள், ஸ்வாமி படைப்புத் தொழிலிலிருந்து எழுந்து கதவைத் திறக்குமாறு வாய் திறந்து சொல். 

அனைத்துயிர்களையும் ரட்சிக்கும் அகன்ற கண்ணினையுடைய நப்பின்னையே, படைப்புத் தொழிலின் பொருட்டு, உன் மணாளனை விட்டு நீங்காது, அவனை சிருஷ்டிக்கும் மயக்கத்திலிருந்து துயில் எழுப்பாமல் இருக்கிறாய். 

 “தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்” 
தது துவம் அஸி (தத்துவம் அன்று) – உண்மையில் அது இரண்டல்ல என்பதால் இந்த ஜீவாத்மாக்களை அழைத்து உய்வித்துக் கொள்வதும் அவன் வேலையே! 

 “குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். “

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.