திருப்பாவை - 23 ”மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்...

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 06 Jan, 2019 11:31 pm

thiruppaavai-23

மழைக்காலம் முழுவதும் குகைக்குள்ளேயே இருக்கும் சிங்கமானது தன் பெட்டையுடன் கூடி பெருக்கம் செய்து கழிக்கும். மழைக்காலம் முடிந்ததும், வேட்டைக்கான காலத்தை உணர்வதால் கண்களை அகன்று திறந்து பார்வையைக் கூர்மை செய்து, உடலை பெரிதாகச் சோம்பல் முறித்து வெளியே வரும். அப்பொழுது, பிடறி சிலிர்த்து நாலா திசையும் நோட்டம் விட்டு, பெரிதாக கர்ஜனை செய்து வெளியே கிளம்பும். 

அது போல,  நரசிம்ம அவதாரம் முடிந்து தாயாருடன் கூடிக் குளிர்ந்து படைப்புத் தொழிலிருக்கும் நாராயணனே! பிரஹலாதனின் தேவையை உணர்ந்து, அவனைக் காக்கும் பொருட்டு, சிலிர்த்தெழுந்து சிம்மநாதம் கொண்டு வந்தது போல எழுந்து வா! என்று மட்டும் சொல்லியிருந்தால் நரசிம்ம அவதாரத்தைத் தாங்கும் சக்தி இங்கே யாருக்கு இருக்க முடியும்? ஆகையால் மிகவும் கவனமாக பூவை பூ வண்ணா என்று விளிக்கிறாள். 
பூவையைத் தன்னகத்தே கொண்டு குளிர்ந்த நிலையிலிருக்கும் லக்ஷ்மி நரசிம்மரை அழைக்கிறார். 

அழகிய சிங்காசனத்தில் வந்து வீற்றியிருந்து. நரசிம்மரின் உக்கிரம் இல்லாமல் சாந்தமடைந்த கருணை கொண்ட லக்ஷ்மி நரசிம்மராக வீற்றிருந்து எனும் போது சீற்றம் குறைந்ததும் தான் அமர்ந்தநிலைக்குச் சென்றார் இல்லையா? அப்படி குளிர்ந்த நிலையில் அமர்ந்து, இப்பிறப்பெடுத்த வந்த எங்களின் காரியம் என்னவென்று ஆராய்ந்து அதை செவ்வனே முடிக்க நீரே அருள் செய்ய வேண்டும் என்று பணிகிறார்.

”மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி

மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த காரியம்

ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்”

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.