திருப்பாவை-27 "கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா..."

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 10 Jan, 2019 03:54 pm

thiruppaavai-27

பகையை முடிப்பதென்பது, பகையாளியை கொல்வது என்பது மட்டுமல்ல. அவர்களையும் வசீகரித்து தன்பால் ஈர்த்து நட்பாக்கிக் கொள்வது கூட வெல்வது தானே? அப்படி தன்னைச் சேராதவர்களைக் கூட வென்று இணைத்துக் கொள்ளும் குணத்தை உடைய கோவிந்தனே!

நாங்கள் அப்படியல்ல, உன்னைக் கூடியே இருக்கப் பிரயத்தனப்பட்டு உன்னையும் உன் புகழையும் மகிழ்ந்து பாடி வருவதால் அதில் மகிழ்ந்து எங்களுக்கு அரிய, பெரிய சன்மானமாக நீர் எமக்கு முக்தியையே கொடுப்பீர் என்று தெரியும். உந்தன் சன்மானம் கிடைத்து விட்டால் எங்களை இந்த ஊரார் மெச்சுவார்கள்...

அதே ஊரார்கள் பாராட்டும்படியாக நாங்கள், பஞ்ச சமஸ்காரம் போல்,  கைகளில் காப்பு அணிந்து (சூடகம்)
தோள்களில் சங்கு சக்கரம் வாங்கி, 
காதுகளில் திருமந்திர உபதேசம் ஏற்றி (தோடு) 
நாராயணனே நமக்கு அந்தமானவன் அவனே நம்மை ஆதரிக்கவல்லவன் என்ற துவய மந்திரத்தை செவி வழியே ஏற்று (செவிப்பூவே)
பாடகமே என்றனைய -  நின் பாதமே சரணமென்றடைந்து சரணாகதி அடைவோம்.

இவையெல்லாம் செய்த பின்பே உலக இயல்பான ஆடை உடுத்துவோம். 

இப்படியான உன் அன்பும் முக்தியும் கிடைத்த பின் தான் விரதத்தை முடித்து உணவு உண்ணுவோம். அதுவும் எப்படியான உணவு? 

பாலினால் வேக வைக்கப்பட்ட சோறு முழ்கும் அளவுக்கு நெய் ஊற்றிச் சமைக்கப்பட்ட அமுதம் போன்ற அன்னத்தை முழங்கையில் நெய் ஒழுக ஒழுக கூட எடுத்து உண்ணுவோம்.

இங்கே பாலும் நெய்யும் கலந்த உணவினை உண்பது என்பதை இவ்வுலக இன்பங்களைத் துய்ப்பது என்று எடுத்துக் கொள்வது நலம்

“கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்”
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.