தமிழக கோயில்களை வலம் வர ரூ.4,900 போதும் - இந்த வாய்ப்ப பயன்படுத்திக்கோங்க

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 08:17 am
indian-railway-pilgrimage-tour-package-for-tamilnadu-temples

தமிழகமெங்கும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை வலம் வரும் வகையில், ரூ.4,885 மதிப்பிலான சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. ’ராம் சேது எக்ஸ்பிரஸ்’ என்னும் அத்திட்டத்தின்படி 3 இரவு, 4 பகல் பொழுதுகளில் தமிழகத்தை சுற்றிப்பார்க்கலாம்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, வரும் 28ம் தேதி ராம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும். மார்ச் 3ம் தேதி சுற்றுலா நிறைவு பெறும். இந்த நாட்களில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜம்முகேஷ்வரர் மற்றும் திருவானைக்கால் கோயில்களில் தரிசனம் செய்யலாம். மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட இடங்களிலும் வழிபாடு நடத்தலாம்.

பயணிகள் செலுத்தும் ரூ.4,885 தொகையில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் பயணம், கோயில்களுக்கு செல்வதற்கான சாலை வழிப் பயணம், தர்மசாலாக்கள் அல்லது மண்டபங்களில் தங்கும் செலவு, மூன்று வேலை சைவ உணவு, சுற்றுலா வழிகாட்டிகள், ரயில் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அடங்கும். தோராயமாக ரூ.5000 செலவில் தமிழக கோயில்களை வலம் வர இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close