பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மாசி மாத தேய்பிறை ஏகாதசி

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 11:58 am
special-article-about-ekadashi

 காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமும், கங்கைக்கு மிஞ்சிய தீர்த்தமும், தாய்க்கு சமமான தெய்வமும், ஏகாதசிக்கு சமமான  விரதமும்  இல்லை என்று அக்னிபுராணத்தில் சொல்லப் பட்டுள்ளது. ஏகாதசி விரதத்தின் பலன் அஸ்வமேத யாகம் செய்த புண் ணியத்தைத் தரும். இந்த ஏகாதசி விரதத்தைப் பற்றி, சிவ பெருமானே பார்வதி தேவியிடம் எடுத்துக்கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.
 
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும், 11 ஆம் நாள் வளர்பிறை ஏகாதசி என்றும், பெளர்ணமிக்குப் பிறகு வரும் 11 ஆம் நாள் தேய்பிறை ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.  ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. 

ஒவ்வொரு மாதம் வரும்  வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளுக்கு  ஒவ்வொரு  தனிப்பட்ட பலனும் உண்டு. மார்கழி மாத வளர்பிறை,  வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பை பெறுகிறது. அன்றைய நாளிலிருந்து  ஏகாதசி விரதம் கடைப்பிடித்து வந்தால் கிடைக்கும் பலன்கள், கணக்கில் அடங்காது. 

வளர்பிறை  ஏகாதசிக்கும்,  தேய்பிறை ஏகாதசிக்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. அதே போன்று  விரதமிருப்பதற்கு குலப்பிறப்பும் அவசியம் கிடையாது. 

மாசிமாத  தேய்பிறை ஏகாதசியான நாளைய ஏகாதசி ஷட்திலா என்று அழைக் கப்படுகிறது. நாளை பசியால் வாடுபவர்களுக்கு அன்னதானம் செய்தால்,  நமக்கு அடுத்து வரும் சந்ததியினரும் வறுமை, பசி என்னும் நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள். 

அன்று பூஜை வழிபாட்டில் கொய்யாப்பழம் வைத்து வழிபடுவது நல்லது. ஷட்திலா ஏகாதட்சியில் காலணி, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு என ஆறு பொருள்களைத் தானம் செய்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதிகம். 

ஆறு பொருள்களை தானம் செய்வதாலேயே, இந்த ஏகாதசி ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது.  ஏழை பிராமணருக்கு இரும்பு வடை சட்டியும், எள்ளும்  கூட  தானமாக கொடுக்கலாம்.  

ஒவ்வொரு  ஏகாதசி விரதமும், பொதுவான பலன்களை அளித்தாலும், தனிப்பட்ட பலன்களையும் சேர்த்தும் வழங்குகிறது. அந்த வகையில், மாசி மாத ஏகாதசி வழி பாடு, முன்னோர்களின் முக்திக்கு வழி வகுக்கும்.

 பிரம்மஹத்தி தோஷம் தாக்கியிருந்தால் நீங்கும். வாழ்வில்  விரக்தி நிலையை நீக்கும். அகால மரணமடைந்தவர்கள் மோட்சம் பெற மாசி மாத ஏகாதசி வழிபாடு உதவும்.

ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, அனைவரும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம். முக்கியமாக,  பெண்கள் மாதவிடாய் காலத்திலும், பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு காலங்களிலும் கூட, ஏகாதசி விரதத்தை விடாமல் தொடரலாம். 

சனிப்பிர தோஷம் போல  பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி  நட்சத்திரங்கள் அன்று வரும்  ஏகாதசியும் முக்கியத்துவம்  பெற்றது.

 ஏகாதசி அன்று கடவுளை வழிபட சிறப்பான பூஜைகளை மேற்கொள்வது நல்லது. ஆனாலும் இயலாதவர்கள்  ஏகாதசி அன்று உண்ணாமல் விரதம் இருப்பதால், உடல் சோர்வை அதிகரித்துக்கொள்ளாமல் வீட்டிலேயே இறைவனை தியானித்து,  விஷ்ணு புராணம், பாகவதம் போன்றவற்றை படிக்கலாம்.

  உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக கொண்டு, பரமாத்மாவை மனதில் உருவேற்றிக் கொண்டே இருந்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close