நாளை மாசி ஞாயிறு பிரதோஷம்

  Newstm Desk   | Last Modified : 02 Mar, 2019 06:42 pm
maasi-sunday-prathosham

சிவப்பெருமானை வழிபடுவதற்கு கால நேரம் கிடையாது. ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் அவரை  நினைத்து வழிபடும் போது பலன்கள் பலமடங்காகிறது. மாதந்தோறும் வரும் வளர்பிறை தேய்பிறை திரயோதசி நாட்களே பிரதோஷ தினம் என்றழைக்கப்படுகிறது. பிரதோஷ தினத்தில் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிவரை  பிரதோஷ காலம் என்றழைக்கப்படுகிறது.

பிரதோஷ காலம் என்பது அனைவரும் அறிந்ததே.  தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு இவையெல்லாம் தோன்றின. முதலில் வந்த திருமகளை திருமால் ஏற்றுக் கொண்டார். அடுத்து வந்த பொருள்களை  தேவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் கொடிய ஆலகால விஷமும் வெளிவந்தபோது அசுரர்களும் தேவர்களும் நடுங்கிய போது அவர்களைக் காப்பாற்ற சிவப்பெருமான் விஷத்தை விழுங் கினார். அதைக் கண்ட பார்வதி  விஷம் அவர் வயிற்றுக்குள் போகாமல்  நெஞ்சு க்குள் கை வைத்து பிடித்தாள்.  நீலகண்டனாக மாறிய பிரதோஷ காலத்தில் தான் இவை நடந்தது.

பிரதோஷம் அன்று  சிவாலயங்களில் சிவனுக்கும், அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் பால், தேன், தயிர், சந்தனம்,  இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் நடக்கும். பின் அருகம்புல், பூ சாற்றி வில்வ இலையால் அர்ச்சனை  நடக்கும்.  நந்திக்கு அர்ச்சனை செய்த பின் மூலவரான லிங்கத்துக்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசித்தால் தோஷங்கள் நீங்கும். பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில்   ஆலயத்தை மூன்று முறை வலம் வருவார். முதல்  சுற்றில் வேத பாராயணமும்  இரண்டாம் சுற்றில் திருமுறைப்பாராயணமும், மூன்றாம் சுற் றில் நாதஸ்வர இசையையும் கேட்டபடி வலம் வர வேண்டும்.

நாளை மாசி ஞாயிறு பிரதோஷம். சூரிய பகவானுக்கு உகந்த நாள் ஞாயிற் றுக்கிழமை.  ஞாயிறு என்றால் சூரியன் என்று  பொருள். சூரிய பகவானுக்கு  உரிய நந்நாளில் ஞாயிறு பிரதோஷம் அமைந்துள்ளது சிறப்பு.  பிரதோஷக் காலம் என்று அழைக்கப்படும் மாலை 4.30  மணிமுதல் 6 மணிவரையான காலம் ஞாயிற்றுக்கிழமையில் வரும்  ராகுகாலமும் கூட.   சிவாலய தரிசனம், ராகு கால வழிபாடு, நவக்கிரக தரிசனமும்  ஒன்று சேர்த்து தரிசியுங்கள்.

பிரதோஷத்தில் விரதமிருந்து  சிவாலயம் சென்று தரிசித்தால் ஓர் ஆண்டு ஆலய தரிசனம் செய்த பலன் உண்டாகும்.  குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரங்களில்  வழிபடும்  போது பலன் பன்மடங்கு அதிகரிப்பதில் பிரதோஷ விரதமும் ஒன்று.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close