விளக்கேற்றி மகாலஷ்மியை வரவேற்கும்  நாம் விளக்கை அணைத்து பிறந்த நாள் கொண்டாடலாமா?

  Newstm Desk   | Last Modified : 03 Mar, 2019 06:11 pm
can-we-off-the-candles-during-birthdays

இறைவனது படைப்பில் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுவது மனித இனம் தான்.   மனிதனாக பிறந்தவன் வாழ்க்கையை எப்படி கழிக்க வேண்டும் என்று தெய் வங்களே பூமியில் அவதாரமெடுத்து உதாரண புருஷர்களாய் வாழ்ந்திருக்கி றார்கள். நமது புராணங்களும் இதிகாசங்களும் கூட  மனிதன் எப்படி வாழ வேண் டும் என்றே எடுத்துரைக்கின்றன.  

குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும்  தாங்கள் பிறந்த நாளை வெகு விமரிசையாகவோ அல்லது கோயிலுக்கு சென்று  அர்ச்சனை செய்து வழிபடுவதோ நமது வழக்கம். ஆனால்  பெரும்பாலோனோர் செய்யும் தவறு ஆங்கில தேதியைக் கணக்கில் கொண்டு பிறந்த நாளைக் கொண்டாடு வதுதான். இந்துமதத்தில்   நாம் பிறந்த மாதத்தை  கணக்கில் வைத்து பிறந்த நட் சத்திரம்  வரும் நாளே பிறந்தநாளாக கருதவேண்டும் என்று கூறியுள்ளது. 

பிறந்த நாளில் மேற்கத்திய பாணியில் கேக்கில் மெழுகுவத்தி விளக்கை ஏற்றி  ஊதி  அணைப்பது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இது அபசகுணத்தையே ஏற்படுத்தும்.  வீட்டில் நல்ல நிகழ்வுகள் ஏற்பட வேண்டும். ஆயுள் நீடிக்க வேண் டும் என்று பிரார்த்தனை செய்யும் நேரத்தில் விளக்கை ஊதி அணைப்பது சிறு அள விலேனும் அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிடும்.  விளக்கேற்றி மகாலஷ்மியை  வரவேற்கும் நாம் விளக்கை அணைத்து நல்ல நாளை கொண்டாடலாமா?

பிறந்த நாளை கொண்டாடுங்கள்...அதே நேரம் பெரியோர்களின் ஆசியோடு குல தெய்வம், இஷ்ட தெய்வத்தின் ஆசியையும்  தடையின்றி பெற வேண் டாமா...உங்கள் நட்சத்திர நாள் அன்று குலதெய்வ சன்னிதிக்கோ.. இஷ்ட தெய்வ கோயிலுக்கோ சென்று நெய் தீபம் ஏற்றுங்கள்.  பிடித்த மந்திரத்தை ஓம் என்னும் மந்திரமாக கூட இருக்கலாம். (எளிய அதே நேரம் சக்தி மிக்க மந்திரம்தான்) இதை  108 முறை சொல்லியபடி பிரகாரத்தை வலம் வாருங்கள்.

குறைந்தது 9 முறை யாவது மந்திரம் சொல்லுங்கள். இயலாத முதியோர்களைக் கண்டால் ஆடை தானம், அன்னதானம் செய்து அவர்களை மகிழ்விக்கலாம்.  அவர்களது மகிழ்ச்சி யோடு இறைவனின் ஆசியும் நிச்சயம் கிட்டும்.  

திருமணத்தடை, குழந்தைப் பேறின்மை, செய்தொழிலில் சங்கடம் என்று பரி காரம் செய்கிறோமே... ஆனால் நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று  செய்யும் வழி பாடு வரவிருக்கும் சங்கடங்களிலிருந்தும் உங்களைக் காக்கும். உங்கள் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட வில்லையென்றாலும் பரவாயில்லை. நட்சத் திரங்களைக் குறித்து வைத்து ஆலய தரிசனம் மட்டுமாவது மேற்கொள்ளுங்கள். நிச்சயம் இறைவனது ஆசி கிட்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close