பக்தி என்பது கைகூப்பி, மந்திரம் சொல்லி ஆலய வழிபாடு செய்வதல்ல...

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 09:56 pm
what-is-worship

நான் தான் கடவுளுக்கு நெருக்கமானவன். காரணம் என்னைவிட சிவபக்தியில் யாரும் மிஞ்சிவிட முடியாது என்று கர்வம் கொண்டான் அர்ஜூனன். காரணம் ஒன்றுமில்லை. அர்ஹூனனுக்கு பாசுபதாஸ்திரம் சிவன் வழங்கியதாலேயே இந்த கர்வமும் அவனுக்கு உண்டாயிற்று.  யாருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உணர்த்த வேண்டுமா என்ன? அர்ஹூனனின்  கர்வத்தை அடக்க வேண்டும் என்று சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர். அதற்கான சமயத்தையும் அவரே உருவாக்கிகொள்வார் என்பதும் நாம் அறீந்த விஷயம்தானே..

ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனிடம் வாயேன்  சற்று தூரம் நடந்து செல்லலாம் என்று அழைத்தார்.  இருவரும் சிவாலாயம் பக்கம் சென்றார்கள். இவர்கள் சென்ற நேரம் ஆலயத்தில் பணி செய்தவர்கள் கூடை கூடையாக இறைவனுக்கு சாற்றிய பூக்களை கொண்டுவந்து புஷ்ப கிணற்றில் கொட்டி கொண்டிருந்தார்கள். அதுதான் அன்றைய முக்கிய வேலை போல ஓடி ஓடி கிணற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். 

நடந்து கொண்டிருந்த அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும், அர்ஜூனனுக்கும் கண்ணில் பட்டது. ஏதோ சொல்ல வாயெடுத்த ஸ்ரீ கிருஷ்ணர் மெளனமானார். இன்று என்ன விசேஷம் கிருஷ்ணா.  சிவப்பெருமானுக்கு புஷ்ப அபிஷேகம் போன்று உலகில் உள்ள பூக்கள் அனைத்துமே இங்கிருக்கிறதே என்றான் அர்ஜூனன். எனக்கென்ன தெரியும் என்ற மாயக்கண்ணன் பூக்களை எடுத்து வந்த பணியாளனிடம் இன்று என்ன விசேஷம்... இவ்வளவு  பூக்கள்  இருக்கிறதே என்று கேட்டு கொண்டிருக்கும்போதே ஆவலில் அர்ஜூனன் கோயிலுக்குள் பிரவேசித்தான். பூசாரியிடம் சென்று இவ்வளவு பூக்களையும் இறைவனுக்காக அனுப்பியவர் யார் என்று கேட்டான்.

உங்கள் பீம மஹாராஜாதான் தினமும் இவ்வளவு பூக்களை அனுப்புகிறார் என்றார். இதைக் கேட்டு குழப்பமடைந்த அர்ஜூனன். கிருஷ்ணா பீமண்ணா சிவபூஜை செய்து நான் பார்த்தே இல்லையே.. நீர் பார்த்திருக்கிறீரா என்று கேட்டான். நானும் பார்க்கவில்லை. ஆனால் இருவருமே பீமனிடம் சென்று சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வோம் என்று சென்றார்கள்.

பீமன் இருவரையும் வரவேற்று விஷயம் அறிந்தான்.  அர்ஜூனா நான்  செல்லும் இடங்களில் வழியெங்கும் பூத்துக்குலுங்கும் மலர்களைக் கண்டால் மனதுக்குள் மானசீகமாக இவை அனைத்தும் உலகை ரட்சிக்கும்  சிவனுக்கு சமர்ப்பணம் என்று   நினைப்பேன். உடனே  வாயுபகவானும் அந்த பூக்களைப் பறித்து சிவாலயங்களுக்கு அனுப்பிவிடுவான். அப்படி  நான் நினைத்த பூக்களைத்தான் நீங்கள் ஆலயத்தில் பார்த்திருக்கிறீர்கள்.. இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு என்றான். புரிந்துவிட்டது என்றான் அர்ஜூனன் தனது கர்வத்தை நினைத்து வெட்கப்பட்டபடி...

இக்கதை எதை உணர்த்துகிறது. மனதில் ஒன்றை பற்றி சிந்தனை பற்றாக மனதுக்குள்ளேயே இருந்தால் அந்த எண்ணம் மந்திரமாய் மாறி எண்ணத்தை நிறைவேற்றும். பக்தி என்பது கைகூப்பி மந்திரம் சொல்லி அனுதினமும் ஆலயம் சென்று வழிபடுவதல்ல.. அனு நொடியிலும் இறைவனை மனதுக்குள் வைத்து பூஜிப்பதில்தான். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close