கோபுரம் என்பது வேறு.. விமானம் என்பது வேறு...

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 05:38 pm
difference-between-kopuram-and-flight

கோ என்றால் இறைவன் என்று பொருள். புரம் என்றால் இறைவன் இருக்கும் இடம். அதனாலேயே  கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள். ஆலயத்துக்குள் செல்லும் போதே கோபுரத்தை கண்களால் தரிசித்த பிறகே  ஆலயத்துக்குள் நுழைய வேண்டும். அதனாலேயே ஊருக்குள் நுழைந்ததும்  எங்கிருந்து பார்த்தாலும் கோபுரம் தெரியுமளவுக்கு  உயரமாக கட்டுவார்கள். கோபுரம் என்பது வேறு.. விமானம் என்பது வேறு.. அன்றாடம் ஆலயத்துக்கு செல்பவர்கள் ஆலயத்தின் தத்துவத்தையும் வழிபடும்  முறைகளையும் அறிந்து கொள்வது அவசியம். 

ஆலயம் என்றால் இறைவனிடம் நமது ஆன்மா லயிக்கும் இடம்  என்று பொருள்.  கோபுரம், ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் என ஒவ்வொன்றும் அழகிய சிற்பங்களைத் தாண்டி ஒவ்வொரு தத்துவங்களை  நமக்கு கற்று தருகின்றன. கோயில்களில் கோபுரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்  ராஜ கோபுரம் கம்பீரமாக மற்ற அனைத்து கோபுரங்களிலும் இருந்து தனித்து உயர்ந்து நிற்கும். கோபுர உச்சியில்  இருக்கும் கலசமானது முக்கியத்துவம் வாய்ந்தது. 

கோபுர கலசங்கள் தங்கம், வெள்ளி, செம்பு அல்லது ஐம்பொன்களால் செய்யப் பட்டிருக்கும். இக்கலசங்களில்  நெல், உப்பு,  கேழ்வரகு, தினை, எள், சோளம் போன்றவற்றை இட்டு நிரப்புவார்கள். இக்கலவையில் வரகு  தானியம் அதிகமாக இருக்கும். இந்த தானியங்களில் உள்ள சக்திக்கான ஆயுள் காலம் மொத்தம் 12 வருடங்கள். அதனாலேயே   ஆலயங்களில் குடமுழுக்கு 12 வருடங் களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு கலசங்களில் மீண்டும் தானியம் நிரப்பபடுகிறது.  விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் கோபுரங்களில் உள்ள கலசங்கள் இடி, மின்னலை தாங்கும் ஆற்றல் பெற்றவை. உதாரணத்துக்கு 100 மீட்டர் கோபுரம் கொண்ட ஆலயத்தில் 200 மீட்டர் விட்டத்தில் உள்ள மக்கள்  இடி மின்னல் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள். அதனால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முன்னோர்கள் கூறினார்கள்.

கோபுரம் என்பது வேறு விமானம் என்பது வேறு. சிவஞானமுனிவர் காஞ்சி புராணத்தின் விமானம்  சதுர அமைப்பைக் கொண்டிருந்தால் நாகரம் என்ற பெயரிலும் வட்டமான விமானமாக அமைக்கப்பட்டிருந்தால் வேசரம், என்ற பெயரிலும் எட்டுப்பட்டை கொண்ட விமானமாக இருந்தால் திராவிடம் என்ற பெயரிலும் மூன்று  வகையான விமானங்கள் உள்ளதாக கூறியிருக்கிறார். இது தவிர ஒரு நிலை, இரு நிலை, மூன்று நிலை, ஐந்து நிலை  பாகுபாடு கொண்ட விமானங்களும் உண்டு. விமானம் என்பது கருவறைக்கு மேல் அமைக்கப்படுவது.  இந்து மதத்தின் ஆகம விதிப்படி, கோயிலானது கருவறை விமானத்துடன்  அமைக்க வேண்டும். இறைவனை வணங்குவதும், கருவறை விமானத்தை வணங்குவதும் ஒன்றே.

கோபுரம் என்பது வேறு...விமானம் என்பது வேறு என்பதை இப்போது உணர்ந்து கொண்டீர்களா?  இனி எங்கு கோபுரத்தை பார்த்தாலும் ஒரு நிமிடம் நின்று தரிசித்து செல்லுங்கள்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close