எளிய முறையில் தியானம்....!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 05:43 pm
easy-meditation

தியானம் செய்தால் ஆன்மாவை உணரலாம். அன்பு, பக்தி, இரக்கம், ஈகை குணம் எல்லாவற்றையும் பெறலாம். முக்கியமாக மனஅமைதி. இரண்டு வழிகளில் தியானம் செய்யலாம். கண்களை மூடியபடி செய்வது ஒரு தியானம் என்றால்  கண்களை திறந்து வைத்துக்கொண்டு செய்வது  இன்னொரு தியானம். 

மனதில் இருக்கும் சலனத்தை ஒதுக்கி ஒரே எண்ணத்தில் கவனம் கொள்ளுதலே தியானம் என்று எளிமையாக சொல்லலாம். ஒருமித்த கவனத்தால் செய்வதா லும், ஆன்மாவை உணரக்கூடிய பக்குவத்தை அளிப்பதாலுமே தியானம் என்பது ஆன்மிகத்தோடு தொடர்பு உடையது என்று முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. ஒருமுகமாக மனதில் நினைப்பதை மாற்றமில்லாமல் கொண்டு வருவதற்கு தியானம் என்பது பெரிதும் உதவியாக இருக்கும். 

நமக்கு ஏற்படும் பாதிப்புகளை உடலிலும் மனதிலும் அனுபவிக்க வேண்டியிருக் கிறது. மனிதர்கள் தாங்களாகவே துன்பங்களை இழுத்து விட்டு கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் கடந்து வாழ்வில் அமைதியையும், மகிழ்ச்சியையும், இறை சக்தியை உணர்ந்துகொள்ளவும் தியானம் உதவி புரிகிறது. தியானம் பற்றி படித்தோ, பிறரது அனுபவத்தைக் கேட்டோ  தெரிந்துகொள்ள முடியாது. சுயமாக தியானம் செய்வதாலேயே உணரமுடியும். நமது எண்ணத்தால் இறைவனை ஆழ்ந்து சிந்தித்தால் கிட்டாத அற்புதங்கள் அனைத்தும் கிட்டும்.  

கண்களைத் திறந்து கொண்டு செய்யும் தியானம் எளிதாக எல்லோராலும் செய்ய கூடியது. வீட்டில் அமைதியான சூழலில்  இருக்கும் அறையைத் தேர்வு செய்து, சற்று உயரமான இடத்தில் அகல்விளக்கை பொருத்துங்கள். பொருத்திய ஒளியை  இடைவிடாமல்  பார்த்துக்கொண்டே இருங்கள். கவனம் முழுவதும் ஒளியின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

நாளடைவில்  இப்பயிற்சியைத் தொடர்ந்து  செய்யும் போது, விளக்கிலிருந்து வரும் ஒளியானது  நமது கண்கள் வழியாக ஊடுருவி ஆன்மாவை தொடுவதை உணரமுடியும்.  தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யும் இப்பயிற்சி நாளடைவில் உங்களுக்குள் ஒரு பேராற்றலை ஏற்படுத்தும். அலைபாயும் மனதை அடக்கி ஆளும் கட்டுப்பாடு கைவசமாகும். 

எளிய முறையில் செய்யப்படும் தியானம் இது என்பதால்  குருவிடம் நேரடி பயிற்சியின்றி மனதுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி பயிற்சியைத் தொடங்கலாம். குறிப்பிட்ட காலத்தில்  குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. பரபரப்பின்றி அமைதியாக இருக்கும் நேரத் தில் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம். 

தியானம் ஆழ்மனதில் இருக்கும் சக்திகளை வெளிக்கொணர்ந்து  வாழ்வில் பல மேன்மைகளை  உண்டாக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close