இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்  !

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 08:31 pm
be-satisfied-with-available-things

இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்று  சொன்னாலும் எளிதில் திருப்தியடையாத பிறவி மனித பிறவி தான். போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து. ஆனால் யாரும் மருந்தாக இருக்க விரும்பவில்லை.   பெரும் பான்மையினோர் திருப்தியில்லாமை என்னும் நோயாகவே இருக்க விரும்பு கிறார்கள்.

கங்காபுரி என்னும் ஊரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். ஊரை சுற்றிலும் அவனுடைய இடம்தான். தலை தலைமுறையாக செல்வத்துக்கு பஞ்சமில்லாமல் இருந்த குடும்பம் அது. அவனுக்கு அடுத்த சந்ததியினர் கூட செல்வாக்கோடு வாழலாம். அள்ள அள்ள குறையாத அளவுக்கு செல்வத்தை நிறைய கொண்டி ருந்தவனுக்கு மனதில் குறை இருந்தது. எதிலும் திருப்தி இல்லாமல்   காலத் தைக் கடத்தினார். 

ஒருமுறை அந்த ஊருக்கு துறவி ஒருவர் வந்திருப்பதாகவும்.. அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு சொல்வதாகவும் எல்லோரும் பேசிக் கொண் டார்கள். துறவி விஷயம் செல்வந்தர் காதுக்கும் வந்தது.  ஒரு வேளை நமக் கிருக்கும் மனக்குறையை இவர் தீர்த்து வைக்க வாய்ப்புண்டு என்று நினைத்தார். துறவியைப் பார்க்க நேரமும் வந்தது. ஐயா.. எனக்கு வாழ்க்கை குறையாகவே இருக்கிறது. எதைக் கண்டாலும் திருப்தியின்மையாகவே தோன்றுகிறது அப்படி  ஒருவேளை நான் துறவறம் மேற்கொண்டு தங்களைப் போன்று மாறிவிட்டால் சரியாகிவிடுமா? என்று கேட்டார்.

துறவி சிரித்தார். துறவிகளது வாழ்க்கை குறையில்லாத வாழ்க்கையப்பா.. நீதான்  எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிக்கிறாயே பிறகு எப்படி? துறவியாக முடியும்.. அதிலும் உன் மனம் மனித வாழ்க்கையிலிருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியாது. வேண்டுமானால் ஒன்று செய். நான் அருகிலிருக்கும் ஷேத்திரத்துக்கு சென்று வருகிறேன். உனக்கு  என்ன  மலர்கள் பிடிக்கும் என்று சொல்லு. நான் வரும் போது வாங்கிவருகிறேன்.. நீ விரும்பியதை மட்டும் சொல்லு. விளக்கம் நிச்சயம் பெறுவாய் என்றார். சரி எனக்கு எப்போதுமே ரோஜா மலர்கள் தான் பிடிக்கும்.

அதன் அழகைக் கண்டு களிக்கும்போது  தான்  என்னை  அமைதிப் படுத்துகிறது என்றார். சரி என்ற துறவி செல்வந்தரிடம்  விடபெற்று திரும்பினார். துறவி மீண்டும் ஊருக்குள் வந்ததும் செல்வந்தர் பார்க்க சென்றார். உனக்கு ரோஜா மிகவும் பிடிக்கும் என்றாயே ஆனால் அது முழுக்க முழுக்க முட்களால் ஆனதா யிற்றே. அதை பராமரிப்பது கூட மிகவும் கடினமாயிற்றே.  சில நேரங்களில் கைகளைக் கீறி காயங்களை ஏற்படுத்திவிடுமே அதனால் தான் உனக்கு தரு வதற்கு யோசிக்கிறேன் என்றார்.

இல்லை.. என் பார்வைக்கு ரோஜாவின் அழகு மட்டும் தான் தெரிகிறது. அதிலிருக் கும் முட்கள் தெரியவில்லை. அந்த பூக்களின் அழகு முன் எனக்கு ஒன்றும் குறைகள் இல்லை என்றார். துறவி கூறினார். இப்படித்தான் வாழ்க்கையும் . நாம் கடக்கும் பாதையில் மலர்களும் இருக்கும். முட்களும் இருக்கும். பாதத்தை கவனித்து எடுத்து வைக்க வேண்டிய அளவு சிந்தனையை கடவுள் கொடுத் திருக்கிறார். எல்லாவற்றிலும் குறைகளை கண்டால் இருக்கும் நிறைகள் எப்படி கண்ணுக்குத்தெரியும்?

பார்ப்பனவற்றிலும் கேட்பனவற்றிலும் நல்லதை மட்டும் எடுத்துக்கொள். குறைகள்  மறைந்து  நிறைந்த வாழ்க்கை வாழ்வாய் என்றார். செல்வந்தன் மகிழ்ச்சியோடு திரும்பினான்.
மனதை நல்வழியில் செலுத்தி இறைவனை நாடினால்  இறைவன் துணை யிருப்பான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close