தீமை வினைகளை அறுப்பவர்கள் இறுதிகாலத்தை கொடுமையாக அனுபவிப்பார்கள் !

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 07:43 pm
the-sower-sowed-the-torch

இறைவனை வேண்டாமலேயே அக்கிரமkகாரார்களுக்கு வேண்டியது கிட்டிவிடு கிறதே என்று சிலர் அங்கலாய்ப்பது வழக்கம் தான்.  அது மனித இயல்பும் கூட ஆனால் உப்பை தின்றவன் தண்ணி குடித்தே ஆக வேண்டும் என்பதே இறை வனின் விதி...

ஊர்போற்றும் ஆன்மிகபெரியவர் ஒருவர் இருந்தார்.  ஒரு முறை ஊர் பெரியவர்கள் மூன்று பேரை பிடித்து அவரிடம் இழுத்து வந்தார்கள்.  விவசாய நிலங்களில்  கொள்ளையடித்து வாழ்ந்தவர்கள்.  நீண்ட நாள்கள் கழித்து இன்று எங்கள் கைகளில் அகப்பட்டுவிட்டார்கள். நீங்களே இவர்களுக்கு  தண்டனை வழங்க வேண்டும் என்று   வேண்டினார்கள்.  தண்டனை  கொடுப்பதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. அவர்களை இங்கேயே விட்டு செல்லுங்கள் என்றார். ஊர் மக்களும் சம்மதித்து சென்றார்கள். இவர் என்ன தண்டனை கொடுத்துவிடுவார் பார்த்துவிடலாம் என்று நினைத்தார்கள் மூன்று கொள்ளையர் களும். 

தண்டனைக்கு வந்தவர்களை விருந்தினராக உபசரித்தார். அவர்கள் கேளா மலேயே விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டது.  சமயம் பார்த்து காத்திருந்த பெரியவர்  ஒருநாள் அவர்கள் மூன்று பேரையும் அழைத்தார்கள். மூவரிடமும் ஒரு  பெரிய கோணிப்பை  கொடுக்கப்பட்டது. அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்று பை நிறையும் அளவுக்கு பழங்களையும், காய்கறிகளையும் கொண்டு வாருங்கள். யார் அதிகம் கொண்டு வருகிறீர்கள் என்று பார்க்கலாம். உரிய காலம் எடுத்துக்கொள்ளுங்கள்.  ஆனால் பை நிறைந்திருக்க வேண்டும் என்று சொன்னார். 

வெட்டியாகவே பொழுதை கழித்தவர்கள். உழைப்பே அறியாமல் இருந்த சோம்பேறிகள் காட்டுக்கு சென்றார்கள்.  மனம் முழுக்க அழுக்கை பரப்பிய முதல் கள்வன் பை நிறைய குப்பைகளையும், காய்ந்த சருகுகளையும் கொண்டு பையை நிரப்பினான்.  மேல்பகுதி தெரியாதவாறு பையை முடிச்சிட்டு கட்டினான்.  பிறகு பையை தூக்கி கொண்டு பெரியவரது இருப்பிடத்தை நோக்கி பயணித்தான். இரண்டாவது கள்வன் திடீரென்று பையை பார்த்தால் என்ன செய்வது என்று மரத்தில் இருந்து கீழே விழுந்த பழங்களை எடுத்து பைகளில் நிரப்பினான். அழுகிய கெட்டுபோன பழங்கள், காய்கறிகள், சிறிது பழங்களை போட்டு பையை கட்டி பெரியவரின் இடத்துக்கு சென்றான். மூன்றாமவன் சற்று யோசித்தான். இதுவரை நாம் திருடி தான் வாழ்ந்திருக்கிறோம்.

திருடுவது தவறு என்றாலும் திருட்டை நாம் தான் செய்தோம். ஆனால் பெரியவரது இடத்தில் வேலையே செய்யாமல் சாப்பிடுகிறோம்  அதற்கு பிரயாசித்தமாக நல்ல பழங்களையும் காய்கறிகளையும் எடுத்து செல்வோம் என்று மனம் மாறி பார்த்து பார்த்து நல்லவற்றை பறித்து பைகளை நிரப்பினான். அவனுக்கு இரண்டு நாட்கள் ஆயிற்று.மூவரையும் மாறி மாறி பார்த்த ஆன்மிக பெரியவர். சொன்னபடி செய்துவிட்டீர்கள்  நீங்கள் கொண்டு வந்த பழங்களையும், காய்கறிகளையும்  சாப்பிட்டு ஒரு வாரம் வரை  உயிர் வாழ வேண்டும்.

அப்படி வாழ்பவர்களை  ஊர்மக்களிடம்  சொல்லி மன்னிக்க செய்து ஊர்பாதுகாவலனாக நியமிக்க செய்வேன் என்றார். திருடனுக்கு தேள் கொட்டியது போன்று இருந்தது முதல் இருவருக்கு. மூன்றாமவன் சந்தோஷமாக தலையசைத்தான். பிறகு ஆளுக்கு ஒரு அறையில் அடைக்கப் பட்டார்கள். அழுக்கு மனம் கொண்டவன்  பையில் எதையும் நிரப்பவில்லை என்பதால் இரண்டு நாட்களிலேயே மரணமடைந்தான். இரண்டாமவன் அழுகிய, கெட்டுப்போன பழங்களையும் காய்கறிகளையும் உண்டு நான்கு நாட்கள் வரை வாழ்ந்தான். மூன்றாமவன் ஒருவாரம் வரை பழங்களையும், காய்கறிகளையும் உண்டு ஆரோக்யமானவனாக இருந்தான். அவனது  உடல் உழைப்பில் வந்த ஆகாரம் வேறு என்பது கூடுதல் மகிழ்ச்சியை அவனுக்கு தந்திருந்தது. 

இப்படித்தான் உலகில் தீமை வினைகளை  அறுப்பவர்கள்  தனது இறுதி காலத்தை கொடுமையாக அனுபவிப்பார்கள். அதனால் அக்கிரமகாரர்கள் செய்யும் தீமைகள்  இறைவனால் எண்ணப்பட்டு வருகின்றன. அதுவரை அவர்களும் வாழ்வார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close