பிறவி  விட்டு  பிறவி  எடுக்கும்போது உடன் வருவது செல்வமா? புண்ணியமா?

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 05:13 pm
which-will-come-with-you-while-leaving-this-world

மனிதர்களுக்கு ஏழு பிறவிகள் உண்டு என்று சொல்கிறார்கள். முற்பிறவியில் பறவையாக  இருந்தோமா.. அல்லது அடுத்த பிறவியில் சிங்கமாக இருப்போமோ இது எதுவும் நமக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆனால் இப் பிறவியில் என்னவாக இருக்கிறோம்.  பிறவிகளில் உயர்ந்த பிறவியான மனித பிறவியாக இருக்கிறோம். இந்த ஒரு பிறவியை நல்ல முறையில் கழித்தாலே போதும் என்று சொல்பவர்கள் தான் அநேகம் பேர். 
அடுத்த பிறவியே எனக்கில்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று  கேட்பவர்களும் இருக்கிறார்கள். வாழும் பிறவியை நல்லமுறையில் கழிக்கவும், மீண்டும் ஒரு பிறவி அடையாமல் இருக்கவும்  புண்ணியம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இப்பிறைவியில் செய்யும் தானங்கள் அடுத்த பிறவியில்  புண்ணியத்தைக் கொடுக்கும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். புண்ணியத்துக்கு சிறந்த உதாரணமாக கர்ணனை சொல்லலாம். ஆனால் புண்ணியமே கர்ணனின் கொடைவள்ளல் தன்மையால் சிறப்பு பெற்றது என்றும் சொல்வதுண்டு.

கர்ணன் பிறக்கும்போது தாயால் கைவிடப்பட்டான். இறுதியில் அவன் இறக்கும் தருவாய் வரை அநேகம் பேரால் கைவிடப்பட்டான். ஆனால் இறுதிவரை அவன் செய்த புண்ணியம் அவனை கைவிடவில்லை. அவனும் புண்ணியம் செய்வதை நிறுத்தவில்லை. இறக்கும் தருவாயிலும் கிருஷ்ணபரமாத்மா  வயதான அந்தண ராக கர்ணனிடம் புண்ணியத்தை யாசகம் கேட்டு வந்தபோது... “என்னிடம் கொடுப் பதற்கு எதுவும் இல்லை என்று நினைத்தேன்.

அந்த சங்கடத்தையும் தாங்களே  தீர்த்துவிட்டீர்கள்” என்று மகிழ்ந்தபடி இன்றுவரை நான் செய்த புண்ணியம் அனைத்தும் உங்களையே சேரட்டும் என்று  இரத்தத்தை நீராக பயன்படுத்தி புண்ணியத்தை தானம் செய்தான்.
அந்நிலையிலும்  கிருஷ்ண பரமாத்மா என்ன வரம் வேண்டும் என்று கேட்க “எந்த பிறவியிலும்  தர்மம் என்று வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லும் நிலை யில் என் மனம் இருக்ககூடாது” என்றான்.

நமது சந்தியினருக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட புண்ணியம் சேர்த்து வைப்பது தான் அவசியம் என்று முன்னோர்கள் கூறியிருப்பது கூட இதனால்தான். நமது புண்ணியங்கள் மற்றவர்களது கண்களுக்கு புலப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. அவை அனைத்தும் சூரியன், சந்திரனின் சாட்சியாக இறைவ னால் நமது கணக்கில் வரவு வைக்கப்படும்.

பிறவி விட்டு பிறவி எடுக்கும்போது நம்முடன்  நமது செல்வம், ஆபரணம், அசையும் அசையாத சொத்துக்கள் பயணிக்கப்போவதில்லை. நாம் செய்த புண்ணியங்கள் தான் கூடவே வரும். அதனால்   கஷ்டப்பட்டு  செல்வம் சேர்ப்பதை விட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தானங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்பிறவியிலும் மீண்டும் ஒரு பிறவி எடுக்க நேர்ந்தா லும் வாழ்வில் நிம்மதி பெறுவீர்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close