மனத்தை அடக்கி ஆள்வது சாதாரண விஷயமல்ல....

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 08:18 pm
its-not-easy-to-control-our-mind

முனிவர் ஒருவர் இருந்தார்.   ஆள் அரவம் இல்லாத இடத்தில் சென்று  தவம் செய்து இறைவனை அடைய வேண்டும் என்று  கடலுக்கடியில் சென்று தவம் புரிந்தார். அவர் தவம் செய்தபோது கடலுக்கடியில் பெரிய மீன்களும் அதைத் தொடர்ந்து சிறிய மீன்களும் சென்றது அவரது மனதை மாற்றியது. தவ வாழ்க்கையை விட இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமோ என்று மனம் மாறியதும் நீரிலிருந்து வெளியேறி, அரசருக்கு 50 மகள்கள் இருந்ததைக் கேள்வி பட்டு  அந்நாட்டு அரசரை சந்தித்தார். 

”என் மகள்களுக்கு சுயம்வரம் நடத்தி திருமணம் செய்ய விரும்புகிறேன். எனினும் நீங்கள் போய் பாருங்கள். அவர்களில் ஒருவருக்கு உங்களை பிடித்தாலும் நான் விவாகம் செய்து வைக்கிறேன்” என்றார். அரசருக்கு முனிவரைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. தாடியும் மீசையும் வயதான தோற்றமும் கொண்ட இவரையா மகள்கள் விரும்ப போகிறார்கள் என்று நினைத்தார்.

முனிவர் உள்ளே சென்ற அடுத்த நொடி 50 மகள்களும் முனிவரை சுற்றிக்கொண்டார்கள். முனிவர் தமது தவவலிமையால் அழகிய கட்டழகு இளைஞனாக மாறியிருந்தார். பெண்களின் விருப்பத்தை நிறைவேற்ற ராஜா 50 பெண்களையும் அவருக்கு விவாகம் செய்துவைத்தார். முனிவர் 50 பெண்களுக் கும் 50 வீடுகளை  உருவாக்கி  அவர்களோடு வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் ராஜா அவர்களது மகள்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்று பார்ப்பதற்காக  முதல் மகள் வீட்டுக்கு சென்றார். முதல் மகள் அதிக  மகிழ்ச்சியோடு  இருந்தாள். என்னை மிகவும் நன்றாக பார்த்துக்கொள்கிறார் அப்பா. ஆனால் என்னிடம் மட்டுமே இருக்கிறார்.  தங்கைகள் யாரிடமும் போவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று ராஜாவிடம் கூறினாள்.

இதே போல் ஒவ்வொரு பெண்ணும் கணவன் தம்மிடம் மட்டுமே வாழ்வதில் மகிழ்ச்சி என்றும் மற்ற சகோதரிகளிடம்  போவதில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார் கள். அரசனுக்கு புரிந்து போயிற்று. முனிவர் தவவலிமையால்  எல்லோர் வீட்டிலும் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டார். எப்படி இருந்தால் என்ன? எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே போதும் என்று நினைத்து கொண்டார்.

இப்படி வாழ்ந்த முனிவர் ஒவ்வொரு மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் வீதம் நூறு பிள்ளைகள் பெற்றார்.  ஒருமுறை எல்லோரையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றார். ஓரிடத்தில் அவருக்கு ஞானோதயம் வந்துவிட்டது. ஐயையோ இவ்வளவு மனைவிகள், இவ்வளவு குழந்தைகளை பெற்றுஅவர்களை காக்கும் பொறுப்பை சுமந்து கொண்டோமே...இவர்களுக்கான கடமையையும் தவறாமல் செய்ய வேண்டுமே. நாம்  இல்வாழக்கையில் ஈடுபடாமல் கடவுளை நினைத்து தவம் செய்திருந்தாலாவது முக்தி  கிடைத்திருக்குமே என்று நினைத்தார். 

எல்லாம்  அறிந்த முனிவரது மனமே ஒரு நிலையில் இல்லை என்னும் போது சாதாரணமான மனிதர்கள் நாம் மனத்தை அடக்கி ஆள்வது சிரமமே.... ஆனாலும் இறைவனது அருள் இருந்தால் எல்லாம் சாத்தியமே...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close