யாம் இருக்குமிடமெல்லாம் அமைதியிழக்கும் - இப்படிக்கு  பணம்...

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 08:16 pm
no-peace-if-i-am-there-yours-cash

அள்ள அள்ள  குறையாத  செல்வம் வேண்டும் என்பதுதான் இன்றைய  பெரும் பான்மை மக்களின் வேண்டுதலாக இருக்கிறது. கலியுகத்தில் யாரையும் குறைசொல்லமுடியாது. எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும்  பணம் தேவை யாக இருக்கிறது. பணம்  இருந்தால் பத்தும் செய்யும் என்பது உண்மைதான்.  பணம் இருந்தால் நிம்மதியைத் தவிர அனைத்தையும் வாங்கலாம் என்பது கூட ஒருவிதத்தில் நன்மைதான். நிம்மதியைத் தாண்டி வறுமை, பசி, இருப்பிடம் போன்ற மற்ற பிரச்னைகளிலிருந்தாவது தப்பிக்கலாமே என்று கூட  சிலர் நினைக்கலாம் ஆனால் இவையெல்லாமே பணம் என்னும் மாயையில் தான் சிக்கியிருக்கிறது. 

பணம் அதிகம் இருந்தாலும்.. பணமே இல்லாமல் இருந்தாலும் மக்களிடம் அமைதி என்பது மட்டும் சற்றும் இல்லாமல் இருக்கிறது என்பது உண்மையே... அதற்கு காரணம் பணத்தில் இருக்கும் கலிபுருஷன் தான். யார் இந்த கலிபுருஷன்? 

கலியுகம் தொடங்கிய நேரம் கலிபுருஷன் தமக்கு உண்டான யுகத்தில் வசிக்க வேண்டுமே என்று பூலோகத்தில் தங்குவதற்காக வந்திருந்தான்.பூலோகத்தில் தங்குவதற்கு அரசனின் அனுமதி வேண்டுமல்லவா..  ”மஹாராஹா.. நடப்பது கலியுகம் என்பதால் நான் இங்கு தங்குவதற்காக வந்திருக்கிறேன். பூலோகம் எனக்கும் புதியது என்பதால் எனக்கு தங்குவதற்கு இடம் கொடுங்கள்” என்று கேட்டான்.

”என் மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே எனது ஆசை. உயர்ந்த என்ணங்களும் நேர்மையும் கொண்ட மனிதர்கள் வாழும் பூமியில் பேராசை பிடித்த உனக்கு இடம் தரமுடியாது என்று மஹாராஜா மறுத்துவிட்டார். நான் பூலோகத்தில் வசிப்ப தற்காக வந்துவிட்டேன். முழுக்க பரவியிருக்க வேண்டும் என்ற எண்ண மெல்லாம் எனக்கு இல்லை. நீங்கள் சொல்லும் இடத்தில் நான் வசிக்கிறேன்” என்றான் விடாப்பிடியாக..

மஹாராஜா அதற்கு மேல் மறுக்கவில்லை..”சரி ஆனால் நன்மக்களை தொல்லை செய்யாமல் சூதாடும் இடங்களிலும், மது,மாது என கேளிக்கை புரியும் இடங்க ளிலும், ஒற்றுமையும் பக்தியும் இல்லாத சர்ச்சைக்குரிய குடும்பங்களிலும், வாய்பேச முடியாத மிருகங்களை வதம் செய்யும் இடங்களிலும் நீ  போய் குடியிரு” என்றார்.

”நானோ ஒருவன்.. நான்கு இடங்களில் எப்படி என்னால் வசிக்க முடியும் தாங்களே ஓரிடம் எனக்கு தேர்வு செய்து கொடுங்கள். ஆனால் நான்  இருக்கும் இடம் எப்படியிருக்கும் என்று தங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. நான் தங்கும் இடத்தில் பேராசை பிடித்தவர்களாகவும் சுயநலமிக்கவர்களும் இருந்தால் அவர்களிடம் நாள்பட நாள்பட அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக் காது. என் மீது ஆசை கொண்டவர்களை என் பிடியில் வைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.

உடனே மஹாராஜா.... தேவைக்கு அதிகமாக இருக்கும் எதுவுமே நிம்மதி தரக் கூடியதில்லைதான். அப்படியே அது இருந்தாலும்  இல்லாதவர்களுக்கு பயன் படுத்தினால் நிம்மதியும் கிடைக்கும்.  புண்ணியமும் சேரும்.  அதற்கு சரியான புகலிடம் இதுதான் என்று நினைத்து தங்க காசை காண்பித்தார்.

அப்போது வந்து தங்கிய கலிபுருஷன் தான் இன்று பண ஆசை பிடித்தவர்களைப் பிடித்து பணம்... பணம்.. என்று ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறார். போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து. நிச்சயம் செல்வத்துக்கும்  பொருந்தும் என்பதால்  கலிபுருஷனை  அதிகம் நேசிக்காமல் இருப்போம். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close