இறைவனிடம் முக்தி பெற இலக்கு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 08:35 pm
how-to-get-close-to-god

பக்தியில் தம்மை மிஞ்ச யாரும் இல்லை என்பது  பெரும்பாலான பக்தர்களின் ஒரே கருத்து. ஆனால் பக்தி என்பது உபவாசமும்,  விரதங்கள் மேற்கொள்வதி லும், பூஜை செய்வதிலும், ஆலய வழிபாடுகளில்  மட்டுமல்ல.. உடல், பொருள், ஆவி அனைத்துமே இறைவனை மட்டுமே நினைப்பதில்தான் அடங்கியிருக் கிறது.. வேண்டுதல்கள், விருப்பங்கள் எதுவாயினும் இறுதியில் முக்தி அடை வது  இறைவனிடம்தான் என்பதுதான் இலக்கு. அந்த இலக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு  அர்ஜூனனே உதாரணம்.

துரோணரிடம் இருந்த சீடர்களில் இருவர் கதாயுதம் பயன்படுத்துவதில் துரியோதனனும், பீமனும் முதல் இடத்தில் இருந்தார்கள். மந்திர ஆயுதங்களில் அஸ்வத்தாமன்  மந்திர ஆயுதங்களில் திறமைமிக்கவனாக இருந்தான். வாள் போரில் நகுலனும், சகாதேவனும் முதலிடத்தில் இருந்தார்கள். ஆனால் இது அத்தனை திறமையையும் ஒருங்கே கொண்டிருந்தான் அர்ஜூனன்.  அனைத்து சீடர்களுக்கும் ஒரே மாதிரிதான் கல்விபயிற்சி என்றாலும் அனைவரையும் மிஞ்சி முதலிடத்தில் இருந்தான் அர்ஜூனன். குருவுக்கு செய்யும் சேவைகளிலும் அர்ஜூனனை மிஞ்ச ஆளில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதனாலேயே அர்ஜூனன் மீது திருதராஷ்டிரனின் மகன்களுக்கு வஞ்சம் இருந்தது.

ஒருமுறை துரோணர்  அவர்களது சீடர்களின் திறனை சோதித்து பார்க்க விரும்பினார். அகன்ற மரத்தின் உச்சியில்  ஒரு செயற்கை பறவையை  உரு வாக்கினார். தனது சீடர்களை அழைத்துக்கொண்டு  அந்த இடத்துக்கு சென்றார்.   ”குழந்தைகளே… இந்த மரத்தின் உச்சியில் நான் ஒரு செயற்கை பறவை நிறுத்தி யிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வாய்ப்பு கொடுக்கப்படும். யார் சரியாக பறவையில் தலையை கொய்கிறார்களோ அவர்களே வில் வித்தையில் முதன்மை பெற்றவர்களாக இருப்பர்கள். பயிற்சியை ஆரம்பிக்கலாமா?” என்றார்.  

சீடர்கள் அனைவரும் உற்சாகமாக ஒப்புக்கொண்டனர். ”சரி குழந்தைகளே ஒவ் வொருவராக வாருங்கள்” என்றார். ஒவ்வொருவராக வந்தார்கள். ”என்ன தெரி கிறது?” என்று கேட்டார் குரு.. ”நீங்கள், சுற்றியுள்ள மரங்கள், என்னுடைய சகோதரர்கள், பறவைகள் என்று எதுவுமே என் கண்ணுக்கு தப்பவில்லை” என் றார்கள். இப்படித்தான் ஒவ்வொரு சீடனுடைய பதிலும் இருந்தது. அடுத்து வந்த அர்ஜூனனிடம் ”நான் தெரிகிறேனா அர்ஜூனா?” என்றார். ”இல்லை குருவே எனக்கு பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது.”. ”அப்படியானால் மரம் தெரிகிறதா?” என்றார். ”இல்லை குருவே பறவையின் கண்கள் தான் தெரிகிறதா? உன்னை சுற்றியிருக்கும் சகோதரக் கூட்டம் கூடவா தெரிய வில்லை” என்றார். ”எனக்கு தெரிந்ததெல்லாம் பறவையின் கண்கள் மட்டும் தான்” என்றபடி அர்ஜூனன் பறவையின் தலையை கொய்தினான். துரோணர் சீடர்களிடம் திரும்பி கூறினார். இப்போது புரிகிறதா உங்கள் இலக்கு என்பது எப்படியிருக்க வேண்டும்  என்று…

அப்படித்தான் இறைவனிடம் முக்தி வேண்டும் என்று கேட்கும்போது லெளகிக வாழ்க்கை மனதுக்குள் தலைதூக்கும்,  மாயை வந்து போகும். ஆனால் நம் மனம் முழுக்க இறைவன்  மட்டுமே இலக்காக இருக்க வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close