பெண்களுக்கு முக்கியமானது காரடையான் விரதம் ஏன்?

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 07:21 pm
why-kaaradaiyan-fasting-is-important-to-ladies

அறியாத அந்நிய ஆணுடன்  திருமண பந்தத்தில் இணையும் பெண்  அக்கணமே தன்னுடைய  விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி கணவனுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடுகிறாள்.  அந்நிமிடத்திலிருந்து அவனது சுகம் துக் கம் அனைத்தையும் இவளும்  பகிர்ந்துகொள்கிறாள். இருவருமே ஒருவருக் கொருவர் புரிதலும் விட்டுக்கொடுதலுமாய் வாழ்க்கையை வாழவே விரும்பு கிறார்கள். 

கணவனே கண் கண்ட தெய்வம் என்று நினைக்கும் பெண்கள் ஒவ்வொரு முறை இறைவனிடம் வேண்டும் போதும் கணவனுக்கு எவ்வித ஆரோக்ய குறைபாடும், ஆயுள் தோஷமும் தாக்க கூடாது என்று  கோரிக்கைகளை வைப்பார்கள்.  விலை மதிக்கத்தக்க ஆபரணங்களை விட மதிப்பு மிக்கது குங்குமமும்,  கூந்தலில் சூடும் பூவும் என்று வாழும் பதிவிரதைகள்  இன்று மட்டுமல்ல  புராணக் காலங்களிலேயே இருந்திருக்கிறார்கள்.

மகாபாரதத்தில்  காந்தாரி என்  கணவன் பார்க்காத இந்த உலகை நானும் பார்க்க மாட்டேன் என்று கண்களில் துணியைக் கட்டிக்கொண்டு வாழ்ந்ததாக  கூறு கின்றன. இப்படி கணவனுக்காக வாழ்ந்த பெண்களுக்கு மத்தியில் விதியையே தனது மதியால் ஜெயித்து எமனிடமிருந்து தன் கணவனை மீட்டள் சத்யவான் சாவித்ரி. 

இறைவனை பெரும்பாலும் அம்மைபெயர்களுடன் தான் அழைக்கிறோம். உமா மகேஸ்வரர், லஷ்மி நாராயணன் என்று ஆனால்  கணவனுக்காக விதியை வென்ற சாவித்ரியை அழைக்கும் போது மட்டும் சத்யவான் என்னும் பெயரே முதன்மையாக உள்ளது. காரணம்  ஒரு பெண்ணுக்கு கணவனே மாதா,பிதா, தெய்வம் எல்லாம் என்று  வாழ்ந்தவள் சாவித்ரி.  

கணவனது வாழ்வு  தன்னுடையது என்று  சுகபோக வாழ்வை விடுத்து காட்டில் வாழ்ந்தாள் சாவித்ரி.   விதியால் கணவனை எமன் பிரித்து அழைத்து சென்றபோது கூட  அவன் பின்னாடியே சென்று  மதியால் போராடி மீட்டு வந் தாள். கணவன் இல்லாத வாழ்வே இல்லை என்று கணவனுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாலேயே  சத்யவான் சாவித்ரி என்று அழைக்கப்பட்டார்கள். சாவித்ரி  கணவனை எமனிடமிருந்து மீட்டது போல் தன்னுடைய கணவருக்கு ஒரு குறையும் வரக்கூடாது என்று  இத்தினத்தில் பெண்கள் கடைபிடிக்கும் விரதமே காரடையான் நோன்பு என்றழைக்கப்படுகிறது.

பிரிந்த தம்பதியர் ஒன்று கூடவும், மாங்கல்ய பலம் அதிகரிக்கவும், சுமங்கலிகளாக வாழ்ந்து முடிக்கவும்   கணவனது ஆரோக்யம் மேம்படவும்,  தீர்க்க ஆயுளுடன் வாழவும்  காரடையான் விரதத்தைப் பெண்கள் கடைப் பிடிப்பார்கள்.  திருமணமான பெண்கள் கணவருக்கு நேர்ந்துகொண்டு  இந்த  காரடையான் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். அவர்களோடு  கன்னிப் பெண் களும் நல்ல குணமுள்ள கணவன் வாய்க்க வேண்டும் என்று இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

காரடையான் நோன்பு விரதம்  பெண்களுக்கு அவ்வளவு முக்கியமானது. நாளை  காரடையான் நோன்பு...  மறவாதீர்கள்...
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close