உலகத்தை வசப்படுத்த உங்கள் வாழ்நாளில் துத்த பிரதோஷம் இருக்கிறதா….

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 08:07 pm
prathosham

சிவப்பெருமானுக்காக வேண்டி இருக்கும்  விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம்.  மாதத்துக்கு இரண்டு நாட்கள்  வரும் பிரதோஷ வழிபாடு மட்டும்தான் அனைவரும் கடைபிடிக்கிறார்கள். ஆனால் பிரதோஷத்தில் நித்திய பிரதோஷம், திவ்ய பிரதோஷம், தீப பிரதோஷம் (மகா பிரதோஷம்), சப்தரிஷி பிரதோஷம், ஏகாட்ச்சர பிரதோஷம், அர்த்தநாரி பிரதோஷம், திரிகரண பிரதோஷம், பிரம்ம பிரதோஷம் ஆட்சரப பிரதோஷம், கந்த பிரதோஷம், சட்ஜ பிரபா பிரதோஷம், அஷ்டதிக் பிரதோஷம், நவகிரக பிரதோஷம், துத்த பிரதோஷம்  என்று 14 வகையான பிரதோஷங்கள் உண்டு.

நித்திய பிரதோஷம்: பிரதோஷம் இல்லாத நாட்களிலும்  ஆலயம் செல்பவர்கள்  சூரியன் மறைவதற்கு முந்தைய 90 நிமிடங்களில் வணங்குவது நல்லது.

சனியன்று திரயாதசி திதியும், கிருத்திகையும் இணைந்துவந்தால் அது கந்த பிரதோஷம், சிவனோடு முருகன் அருளையும் தரும் பிரதோஷம் இது.

திவ்ய பிரதோஷம்.:  துவாதசி திதியும், திரயோதசி திதியும் சேர்ந்து வரும் பிரதோஷமே  திவ்ய பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய விசேஷமான பிரதோஷத்தினத்தன்று  பெருமை மிக்க சிவத்தலங்களில் உள்ள மரகத லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம் அல்லது பஞ்சலோகத்தால் செய்த லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகத்தை தரிசிக்கலாம்.  இதனால்  உயர்ந்த பலன்களை பெறலாம். 

தீப பிரதோஷம் (சனி என்னும்  மகா பிரதோஷம் ): சனி பிரதோஷம் பிரதோஷங்களில்  முக்கியத்துவம் மிக்கது. சனிக்கிழமையும்  திரயோதசி திதியும் இணைந்து வரும்  பிரதோஷமே  மகா பிரதோஷம்.  மற்ற பிர தோஷ நாட்களில்  விரதம் இல்லையென்றாலும் சனிபிரதோஷத்திலாவது  சிவபக்தர்கள் விரதம்  கடைப்பிடிப்பது  வாழ்வில் மேன்மை அடைய உத வும்.

சப்தரிஷி பிரதோஷம்.:பிரதோஷ விரதத்தை முடித்தவர்கள் அன்று வானத்தை பார்த்தால்  நட்சத்திரக் கூட்டங்களை கவனிக்கலாம். இதுதான்  சப்தரிஷி பிரதோஷம். சிவனுடன்  ரிஷிகளது ஆசிகளையும் பெறலாம் என் பது குறிப்பிடத்தக்கது.

ஏகாட்ச்சர பிரதோஷம் : ஏகாட்ச்சரபி வருடத்தில் ஒரு முறை மட்டுமே  சனிக்கிழமையன்று வரும் மகா பிரதோஷம்  ஏகாட்ச்சர பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.. அன்று முழுவதும் மனதில் சிவனை நினைத்து  ஓம் என்னும் பிரணவ  மந்திரத்தை சொல்லி வழிபட்டால் தோஷங்கள் அனைத் தும் விலகும் என்பது ஐதிகம்.. இரண்டு முறை சனிக்கிழமை வரும் பிர தோஷம் அர்த்தநாரி பிரதோஷம் ஆகும். கருத்து வேறுபாடு கொண்ட தம்ப தியர் சேர்ந்து சிவாலயம் சென்று வணங்கினால்  கருத்துகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

வருடத்திற்கு மூன்று சனிக்கிழமைகள் பிரதோஷம் வருவதே திரிகரண பிர தோஷம். இந்த மூன்று விரதத்தையும் முறையாக கடைப்பிடித்தால் குடும்பத் தில் வறுமை என்பது இருக்காது. நான்கு சனிக்கிழமைகளில் வரும் பிர தோஷம் பிரம்ம பிரதோஷம். முன்னோர் சாபங்களிலிருந்து நிவர்த்தி அளிக் கும் பிரதோஷம் இது.  சாப விமோசனம் பெற வருடத்துக்கு ஐந்துமுறை வரும் ஆட்சரப பிரதோஷம்  கடைபிடிக்க வேண்டும். வருடத்துக்கு ஏழு நாட் கள் மகா பிரதோஷம் வந்தால் பிறவி என்னும் பெருங்கடலை கடக்க முயல் பவர்கள் இந்த சட்ஜபிரபா பிரதோஷத்தைக்  கடைபிடிக்கலாம்..

எட்டு மகா பிரதோஷங்கள் வருடத்துக்கு வருமாயின் சிவனுடைய ஆசியும் அஷ்ட்டதிக்க பாலகர்களது ஆசியும் பெற்று தலைமுறை தலைமுறையாக புகழோடு வாழ்வீர்கள். வருடத்துக்கு ஒன்பது மகா பிரதோஷங்கள் (வருவது மிகவும் அரிது) வந்தால் நவகிரக பிரதோஷம். சிவனோடு நவகிரகங்களின் அருளும் ஐக்கியமாகும்.  

வருடத்தில் பத்து மகா பிரதோஷமே  துத்த பிரதோஷம் என்றழைக் கப்படுகிறது.  உங்கள் வாழ்நாட்களில் இப்படி வருவதற்கு  மிக மிக வாய்ப்பு குறைவு. வருட துவக்கத்திலேயே பிரதோஷ நாட்களை கணக்கில் கொண்டு மகா பிரதோஷ நாளையும் கவனியுங்கள்.  அப்படி  வந்தால் பத்து மகா பிர தோஷ விரதங்களையும் விடாமல் கடைபிடியுங்கள். உலகமே உங்கள்  வசமாக்க ஈசன் தடையின்றி அருள் புரிவார்.  

துத்த பிரதோஷத்தைக் கடைப்பிடிக்கும் பேறு பெற்றால் நீங்கள் இறைவனின் செல்வாக்குக்குரியவர்கள்தான். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close