பிரம்மனது படைப்பில் குறைகளை நிறைகளாக்க மனிதனின் முயற்சியும் முக்கியம் !

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 09:47 am
brahamma-s-creation

ஒருமுறை வைகுண்டத்தில் பெருமாள் மெதுவாக  பூலோகத்தை எட்டிப்பார்த்தார். ஒரு மனிதன் வேகமாக சென்று கொண்டிருந்தான். அவனைக் கண்டதும்  சத்தமாக சிரித்து விட்டார். பிரம்மன் பயங்கர குழப்பத்தில் இருந்த போது படைத்தவனாயிற்றே... பாவம். என்று முணுமுணுத்தார்... அவரது புன்ன கையைக் கண்ட லஷ்மிதேவி ஆச்சரியமாக அவரது கண்களை தொடர்ந்து பூமி யில் எட்டிப்பார்த்தாள். பிரம்மாவின் குழப்பம் அவளுக்கும் புரிந்துவிட்டது போல் மெதுவாக நகைத்தாள். 

”என்ன தேவியாரே... இந்த பக்தனுக்கும் ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லபோகிறாயா?” என்று கேட்டார் விஷ்ணு.... ”அவனுக்கு கொஞ்சம் நீங்க ளாவது புத்தியாவது கொடுக்கக் கூடாதா?” என்றாள். ”நான் என்ன செய்வது... பிரம்மனை அல்லவா கேட்க வேண்டும்” என்றார். அப்போது அங்கு வந்த பிரம்மனோ ”நான் குழப்பத்தில் இருந்ததெல்லாம் உண்மைதான். ஆனால்  எவ்வ ளவோ முயற்சி செய்தும் அவன் அடிமுட்டாள்தனத்தை மட்டும் என்னால் மாற்றமுடியவில்லை. அவனும் அல்லவா ஒத்துழைக்கவேண்டும். நடப்பதை கவனியுங்கள்” என்றார். சரி என்ன நடக்கிறது  பார்க்கலாம்  என்று  அனை வரும்  முட்டாளைக் கண்காணித்தார்கள். 

அந்த மனிதன் எஜமானின் உத்தரவுக்கேற்ப துறவிக்கு பணிவிடை செய்ய சென்றான். அவன் போன நேரம் துறவி  தியானத்தில் இருந்தார். இவனுக்குத் தான் தியானம் பற்றி ஞானமெல்லாம் கிடையாதே. மெதுவாக அவர் அருகில் சென்று அழைத்தான்... அவர் கண்களை திறக்கவில்லை என்றதும் அருகில் சென்று உலுக்கினான்..”.சாமீ…. சாமீ….”. என்றான்.

”கோபத்துடன் கண்களைத் திறந்தார். சாமி நான் வந்துட்டேன் முதல்ல என்ன வேலை செய்யணும்?” என்றான். ”போய் கிணற்றில் நீர் இறைத்து தண்ணீர் கொண்டு வா” என்றார். அவன் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். காக்கை கதை நினைவுக்கு வந்தது. பெரியபெரிய கற்களை எடுத்து கிணற்றுக்குள் வீசினான். அட தண்ணி மேல வரலியே.. என்றபடி துறவியிடம் திரும்பினான்.

”சாமி. சின்ன பானையில கொஞ்சம் தண்ணி இருந்தாலே கல் போட்டா மேல தண்ணி வரும்.. ஆனா  கிணத்துல பெரிய பெரிய கல் போட்டும் தண்ணி மேல வரலியே” என்றான்... துறவி அவனை அழைத்துக்கொண்டு கிணற்றுக்குள் சென்று கயிறில் வாளியைக் கட்டி  நீர் இறைத்து காட்டினார்.  பிறகு பொறுமையாக கற்றுகொடுத்தார். ஆனாலும் அவன் அதை கற்கும் மனநிலையில் இல்லை. 

அடுத்து மரம் ஒன்று  புயலால் கீழே விழுவதற்கு தயாராக இருந்தது. அதில் இருக்கும்  பறவை கூட்டை எடுத்து வேறு மரத்தில் வைத்துவிடு என்றார் துறவி.. இது என்ன பிரமாதம் என்றவன்  வேறு மரத்தில்  கூட்டை வைத்துவிட்டு உச்சி யில் உட்கார்ந்திருந்தான். நீண்ட நேரமாக  முட்டாளை காணவில்லையே என்று துறவி தேடிவந்தார். ”சாமி.. நீ சொன்ன மாதிரி கூட்டை மாத்திட்டேன். ஆனா பறவையை கூட்டுக்குள்ள வைக்கலாம்னா பறவை கையில சிக்க மாட்டேங்குது  மேல பறந்தா நான் பிடிச்சுக்கிறேன்.. கீழ வந்தா நீ புடிச்சுடு” என்றான்.. துறவிக்கு என்ன செய்வதென்றே  தெரியவில்லை... இப்படியே ஒவ்வொரு வேலையை யும் அவர் கற்றுதருவதும் இவன் கவனிக்காமல் இருப்பதுமாய் நாட்கள் கழிந் தது.

துறவியின் பொறுமை எல்லை மீறியது.. ”நான் ஒன்று சொன்னால் கேட்பாயா?” என்றார். ”சொல்லுங்க சாமி” என்றான் முட்டாள்.. ”உன்னை போன்ற அறி வாளிகளுக்கு என்னிடம் வேலை இல்லை. உன் எஜமானிடமே சென்று விடு” என்றார்.  சந்தோஷமாக தலையாட்டியபடி திரும்பினான் முட்டாள்.

இப்போது புரிகிறதா.. பொறுமைக்கு பெயர் போன துறவியே பொறுமை இழக்கும் அளவுக்கு அடிமுட்டாளாகவே இருக்கிறானே என்று சிரித்தார் பிரம்மா…  பிரம்மனது படைப்பில் குறையும் நிறைகளாக மாறும் ஆனால் மனிதனின் முயற்சியும் அவசியதாம் என்று ஒப்புக்கொண்டாள்  மகாலஷ்மி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close