இறந்தவர்களின் திருமாங்கல்யத்தை என்ன செய்ய வேண்டும்?

  டேவிட்   | Last Modified : 15 Mar, 2019 09:59 am
thirumaangalyam

தங்கம் மகாலஷ்மிக்குரியது. அதனால்தான் இடுப்புக்கு கீழ் தங்கம் அணியும் பழக்கம் நம் வழக்கத்தில் இல்லை. தங்கத்தில் செய்யப்படும் திருமாங்கல்யம் மிகவும் உன்னதமானது. திருமணத்தில் திருமாங்கல்யதாரணம் உண்டு. அறுப தாங் கல்யாணம்.. சதாபிஷேகம் என்று வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்த பெண்மணி இறந்துவிட்டால் அவரது திருமாங்கல்யம்  அவருடைய மகள்க ளுக்கும், மகள்கள் இல்லையென்றால் மருமகளுக்கும் போய் சேரும். 

இந்த திருமாங்கல்யத்தை என்ன செய்வது? இதை உருக்கி வேறு ஆபரணமான மாற்றி அணியலாமா? அல்லது  மாற்றிவிடலாமா  என்று தோன் றும். ஆனால் திருமாங்கல்யம் வெறும் தங்கமாக மட்டுமே பார்க்கப்படுவதில்லை.  அது உறவுகளும், பாசமும் சம்பந்தப்பட்ட விஷயம்.. மஞ்சள் கிழங்கில் கட்டப் பட்ட தாலி தங்கத்தின் வருகைக்கும் பயன்பாட்டுக்கும் பிறகு தங்கத்தில் அவர்க ளது பழக்கத்துக்கேற்ப செய்து அணிவது வழக்கமாயிற்று...

சில பழமைவாதிகள் திருமாங்கல்யத்தை அணியக்கூடாது. அதை கோவில் உண்டியலில் போட்டுவிடுங்கள் என்று சொல்வார்கள். இன்னும் சில புதுமை வாதிகள் இப்போதைய ஃபேஷன் என்று திருமாங்கல்யத்தை  அப்படியே மோதி ரமாக உருவாக்கி மாட்டிக்கொள்வார்கள். ஆனால் இது இரண்டுமே தவறு. திரு மாங்கல்யத்தை மாற்றி வேறு நகைகள் வாங்காமல் அதை உருக்கி காதணி யாகவோ, மோதிரமாகவோ, டாலராகவோ  செய்து அணிவது நல்லது.

நல்ல  நாள் நல்ல முகூர்த்தத்தில் நல்ல நேரம் பார்த்து  வேத மந்திர ஒலியோடு இணைந்து பெண்களின் கழுத்தில் கட்டப்படும் தாலி தங்கத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. அந்நிமிடம் முதல் அது வெறும் தங்கமாகவோ... அணிகலனாகவோ மட்டும் பார்க்காமல் அப்பெண்ணின் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுக்கிறது.  தங்கத்தால் இழைத்த ஆபரணங்கள் கூட இந்த திருமாங்கல்யத்துக்கு முன்பு சாதாரணமானதுதான்... நவீன காலங்களில் வித விதமான வடிவங்களில் ஆபரணங்கள் வந்தாலும் விலைமதிப்பில்லா திருமாங் கல்யத்தின் வடிவமும், உருவமும் இன்றும் மாறாமல்  இருப்பதில் இருந்தே அதன் பெருமையைப் புரிந்துகொள்ள முடியும். 

ஐம்பெருங் பூதங்களில் தங்கத்துக்கு தேஜஸ் என்று பெயர். பிறர் மனைவியை நோக்கும்  கள்ளனை நெருங்கவிடாமல் காப்பதில் தங்கத்தில் உள்ள தேஜஸ் என்னும் நெருப்பு பூதம் செயல்படுகிறது என்று கூறுகிறார்கள். அவ்வளவு சிறப்பு மிக்க தங்கத்தை, உருக்கி, அணிகலனாக செய்து அணிந்தால் இறந்தவர்கள் எப் போதும் நம்முடன் துணையிருப்பதாக ஐதிகம்.  அப்படி அணிந்தாலும் கூட பாதிப்பு வருமா? என்று அறியாமையால் கேட்பவர்களும் உண்டு. 

சகுணம் பார்க்கும் குணம் இந்துமதத்துக்கே உரியது. ஆனால் சகுணம் விஞ்ஞானத்தோடு தொடர்பு கொண்டவை என்பதை சமீப கால  விஞ்ஞானமு உணர்த்திவருகின்றன.  மனதில் உருவாகும் எண்ணங்களே வாழ்க்கையில் வடி வம் பெறுகிறது.   நடக்க விரும்பாத ஒன்று நடந்துவிடுமோ என்று தொடர்ந்து நம் மனம் நினைத்து வந்தால் நம் எண்ணங்களே அதற்கு சக்தி கொடுத்து  நடக்க செய்துவிடும்.  இறந்தவரது திருமாங்கல்யத்தை மாற்றி பயன்படுத்தினாலும் விபரீதமாகுமோ என்று நினைப்பதேகூட  தவறுதான். 

இறந்தவரது திருமாங்கல்யத்தை உருக்கி அணிந்துகொள்ளும் அணி கலனில் அவர்களது  ஆசியும் இணைந்திருக்கும் என்பதே உண்மை...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close