மேல் நோக்கு நாள், கீழ்நோக்குநாள், சமநோக்கு நாளில் என்ன செய்யலாம்?

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 09:33 am
melnokku-keezhnokku-naal

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ் நோக்குநாள்,  சம நோக்கு நாள் என்று  குறிப்பிட்டிருப்பதைப்  பார்க்கலாம்.  இவை அனைத்தும் நட்சத்திரத்தின் அடிப்படையை வைத்தே கணக்கிடப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் 9 எண் ணிக்கை வீதம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு அவையே மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், சம நோக்கு நாள் என்று அழைக்கப்படுகிறது.

ஜோதிடர்களிடம் சென்று நாள் நட்சத்திரம் பார்த்து சுபகாரியங்களைச் செய் வது வழக்கம்.எனினும் காலண்டரைப் பார்த்து  நமக்கு ஏற்ற தேதிகளைக் குறித்து வைத்துக்கொண்டு அந்தத் தேதிகளில் சுபநிகழ்ச்சி நடத்த அனுமதி  கேட்போம். அப்படி சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நாள்களைப் பார்க்கும் போது மேல் நோக்கு நாளாக பார்ப்பது அவசியம். 

மேல் நோக்கு நாள்:

ஊர்த்துவமுத நட்சத்திரங்கள் என்றழைக்கப்படும் உத்திரம், உத்திராடம்,  ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி போன்ற 9 நட்சத்திரங்களும் மேல் நோக்கு நட்சத்திரங்கள்.. இவைதான் மேல் நோக்கு நாள் என்று அழைக்கப்படுகிறது. மேல் எழும்பக்கூடிய செயல்களை இத்தினத்தில் செய்வது நல்லது. செடி, மரம்,கொடி, பயிர், மதில், வீடுகட்டுதல் போன்ற  நிகழ்வுகளை இத்தினத்தில் செய்தால் சிறப்பாக  மேலெழும்பும் என் பது ஐதிகம். உத்தியோகம், வியாபாரம், கிரையம், பொருள்,மனை, வீடு வாங்குத லும் இத்தினத்தில் செய்வது  சிறப்பானதாகக்  கருதப்படுகிறது.

கீழ் நோக்கு நாள்:

அதோமுக நட்சத்திரங்கள் என்றழைக்கப்படும் பரணி, கிருத்திகை, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி போன்ற ஒன்பது நட்சத் திரங்களும் கீழ் நோக்கு நட்சத்திரங்கள். இவைதான் கீழ் நோக்கு நாள் என்றழைக்கப்படுகிறது. கீழ் நோக்கி செய்யக்கூடிய  செயல்களை இத்தினத்தில் செய்யலாம். வீடு கட்டும் இடத்தில் கிணறு, போர்வெல் தோண்டுவது, விவசாய நிலங்களில்  மண்ணிற்கு கீழ் விளையக்கூடிய கிழங்கு, காய்கறி  வகைகளைப் பயிரிடுவது போன்றவற்றைச் செய்யலாம்.

சமநோக்குநாள்:

த்ரியக்முக் நட்சத்திரங்கள் என்றழைக்கப்படும் அஸ்தம், அஸ்வினி,அனுஷம், மிருகசீரிஷம், சுவாதி, புனர்பூசம்,சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட் சத்திரங்கள் சமநோக்கு நட்சத்திரங்கள். இவைதான் சமநோக்கு நாள் என்ற ழைக்கப்படுகிறது. சமமான வேலைகளை இந்தத் தினத்தில் செய்யலாம்.  வாக னங்கள் வாங்குவது, வீட்டுக்கு தளம் அமைப்பது, நிலம் உழுவது, கால் நடைகள் வாங்குவது,நிலம் வாங்குவது, நிலத்தைப் பதப்படுத்துவது, பயிரிடுவது  போன்ற செயல்களை இன்றைய தினத்தில் செய்வது மேன்மையைத் தரும். 

மேல் நோக்கு நாள், கீழ்நோக்குநாள், சமநோக்கு நாள் என்று நாள்களுக்கு தகுந்தபடி அதற்குரிய வேலைகளைச் செய்தால்  நாம் செய்யும் செயல்கள்  அனுகூலத்தைத் தரும்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close