பரணி நட்சத்திரக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்க....!

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 09:43 am
bharani-natchathiram

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று துன்பத்தில் அலுத்துக்கொள்பவர்கள் தங்கள் நட்சத்திரத்துக்குரிய வழிப்பாட்டு தலத்துக்குச் சென்று உரிய முறையில் மனமுருகி வேண்டினால் இறைவனின் அருள்பார்வை நிச்சயம் பெறலாம். யாதொரு துன்பத்திலும் இருந்து நிச்சய விடுதலை பெறலாம்.  

பரணி நட்சத்திரம் உடையவர்கள் தங்கள் தோஷங்கள் நிவர்த்தியாக பரிகாரம் செய்தாலும் அவர்களுக்குரிய  தலத்தில் வழிபாடு செய்வது தோஷங்களைக் குறைக்கும். பரணி நட்சத்திரம் கொண்டவர்கள் செல்ல வேண்டிய தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நல்லாடை என்னும் ஊரில் இருக்கும் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில். 

இத்தலத்தில்  மூலவர் அக்னீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் அக்னீஸ்வரர்   என்பதால்   கருவறையில் லிங்கத்தைச்  சுற்றி தாழ்வான பகுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  மூலவர் அக்னீஸ்வரர் என்பதால் அதைத் தணிக்கும் வகையில் தாழ்வான பகுதியில் எப்போதும் நீர் சூழ்ந்து இருக்குமாறு வைக்கப்படுவது இத்தலத்தின் சிறப்பு. 

மூலவர் மேற்கு நோக்கியும் தாயார் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கிறார்கள்.  கோயிலின் மூன்று பக்கங்களிலும் கோபுரத்துடன் கூடிய வாசல் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகாவிஷ்ணு, மஹாலஷ்மி, சோமாஸ்கந்தர், சனிபகவான், கைலாசநாதர், புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர்ம் தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், சூரியன், பைரவர் துர்க்கை சன்னிதிகள் இங்கு  அமைந்திருக்கிறது.

சிவாலாயங்களில் நவக்கிரகங்களுக்கென்று தனி சன்னிதி உண்டு. ஆனால்  இங்கு சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால் நவக்கிரகங்களுக்கு தனி சன்னிதி இக்கோயிலில் இல்லை.  பரணியில் பிறந்தால் தரணி ஆள்வார்கள் என்று சொல்வார்கள். அக்னீஸ்வரர் உக்கிரத்துடன் இங்கு  மேற்கு நோக்கி அருள்பாலிப்பதால் பரணி நட்சத்திரக்காரர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் இத்தலத்துக்கு வந்து அக்னீஸ்வரரைத் தரிசிக்கலாம். 

சிவனுக்கு ஹோமங்களும்,அர்ச்சனைகளும் இங்கு சிறப்பாக செய்யப்படுகிறது. குறிப்பாக பரணி நட்சத்திரக்காரர்கள்  கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாவதோடு பலனும் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதிகம்.  தொழிலில்  தொல்லை தரும் எதிரிகளை வெற்றிக்கொள்ளவும், தானதர்மங்கள் அதிகரிக்க வேண்டிய செல்வத்தையும்,தொட்டவையெல்லாமல் தடையின்றி வெற்றிபெறவும் அக்னீஸ்வரரின்  அருள் பூரணமாக கிடைக்கும்.

பரணி நட்சத்திரக்காரர்கள்  வாழ்வில் அனைத்து தோஷங்களையும் நீங்கி   செல்வாக்குடன் வளர வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நல்லாடை அக்னீஸ்வரரை வழிபடுவது சிறப்பு சேர்க்கும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close